Google Pay Update -கூகுள் பே மற்றும் பிற யுபிஐ சேவைகளில் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) கொண்டு வந்துள்ள புதிய யுபிஐ சர்க்கிள் விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த விதிகள் மூலம் இரண்டு யுபிஐ அக்கவுண்ட்களை பயன்படுத்த முடியும், ஆனால் மாதத்திற்கு ரூ.15,000 வரை மட்டுமே அனுப்ப முடியும். இந்த விதிகளைப் பற்றிய முக்கிய தகவல்களை இப்போது பார்ப்போம்.
Google Pay Update -கூகுள் பே (Google Pay) பயன்படுத்தும் அனைத்து யுபிஐ (UPI) பயனர்களுக்கும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) கொண்டு வந்துள்ள யுபிஐ சர்க்கிள் விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த புதிய விதிமுறைகள் மூலம் ஒரே பேங்க் அக்கவுண்டில் இரண்டு யுபிஐ ஐடிகளை பயன்படுத்த முடியும், ஆனால் ரூ.15000க்கு மேல் பணம் அனுப்ப முடியாது.மேலும், இந்த விதிகள், Google Pay மட்டுமல்லாது, போன்பே மற்றும் பேடிஎம் போன்ற அனைத்து யுபிஐ பயன்பாட்டு செயலிகளுக்கும் பொருந்தும்.
இந்த விதிகள் கூகுள் பே ,போன்பே மற்றும் பேடிஎம் போன்ற UPI ஆப்களை வைத்திருக்கும் அனைவருக்கும் பயன்படும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது.இந்நிலையில் கூகுள் பே நிறுவனத்தில் தான் முதன் முதலில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
தற்பொழுது, கூகுள் பே ஆப்பில் ஒரு பேங்குக்கு ஒரு யுபிஐ அக்கவுண்ட்டை மட்டுமே ஓப்பன் செய்ய முடியும். ஏனென்றால், ஒரு மொபைல் நம்பர் மூலம் யுபிஐ அக்கவுண்ட் (UPI Account) ஓப்பன் செய்யப்படுவதால், ஒன்றுக்கு மேல் கொடுத்தால், ஓடிபி வெரிபிகேஷனில் சிக்கல் ஏற்படும்.இந்த ஒரேவொரு அக்கவுண்ட் விதிகளிலேயே ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா - ஆர்பிஐ (Reserve Bank of India)புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.ஒரு பேங்க் அக்கவுண்ட்டில் இரண்டு யுபிஐ அக்கவுண்ட்டை ஓப்பன் செய்து கொள்ளலாம். அதில் பிரைமரி மற்றும் செகண்டரி என்று அக்கவுண்ட்கள் பிரிக்கப்பட்டு, பணம் அனுப்ப முடியும்.
இதற்கு ஒரேவொரு மொபைல் நம்பர் இருந்தால் போதும் என்று தெரிவித்தது. இந்த மாற்றங்களையே யுபிஐ சர்க்கிள் விதிகளாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் கொண்டு வந்துள்ளது. இந்த யுபிஐ சர்க்கிள் மூலம் ஒரே பேங்க் மூலம் இரண்டு யுபிஐ ஐடிகளை பயன்படுத்தி கொள்ளலாம்.செகண்டரி பயனரால் மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.15000 வரை மட்டுமே அனுப்ப முடியும்.இந்நிலையில்,செகண்டரி பயனர் பேமெண்ட்கள் செய்யும்போது, பிரைமரி பயனரின் அனுமதி தேவைப்படும்.மேலும்,Google Pay இல் அதிகபட்சமாக 5 பயனர்களை இணைக்க அனுமதி வழங்கப்படும்.