Garlic Health Benefits - நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்துகிற வெள்ளைப்பூண்டில் இருக்கும் நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இன்றைய காலக்கட்டத்தில் சமையலில் ஒரு வித சுவைக்காக சேர்க்கப்படும் வெள்ளைப்பூண்டு என்பது அன்றைய சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்து வகைகளில் மூலப்பொருளாக பயன்படுத்தப்பட்டு வந்தது, பெரும்பாலான முக்கிய சித்த மருந்துகளில் பூண்டுகளின் இணைப்பு இல்லாமல் இருக்காது, பூண்டு பல மருத்துவ பயன்கள் கொண்டதாக அப்போதே அறியப்பட்டு இருக்கிறது.
பொதுவாக பூண்டில் உள்ள அல்லிசின் என்ற பொருள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெருமளவில் உதவுகிறது. இது வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது, பூண்டை தினமும் உணவில் எடுத்து வந்தால் அது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
மேலும் பூண்டு இரத்த நாளங்களில் இரத்த உறைவு உருவாவதைத் தடுக்கிறது, இதனால் இரத்தநாளங்களில் ஏற்படும் அடைப்புகளால் வரும் இதய நோயின் அபாயம் குறைகிறது, பூண்டில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவுகின்றன, பூண்டு செரிமானத்தை மேம்படுத்தவும், வயிற்று உப்புசம் மற்றும் வாயுத் தொல்லையிலிருந்து விடுபடவும் உதவுகிறது.
பூண்டு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது, பூண்டை எண்ணெயில் வறுத்து சாப்பிட்டு வந்தால் நுரையீரலில் கட்டியிருக்கும் மார்புச்சளியை அது கரைத்திடும், கபத்தை இளக்கி நல்ல தூக்கத்தை தரக்கூடியது, பூண்டில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமம் மற்றும் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.
" உடல் எடைக் குறைப்பிலும் வெள்ளைப்பூண்டு என்பது வெகுவாக பயன்படுகிறது, உணவின் ஸ்பரிசமான சுவைக்காக சேர்க்கப்படும் இந்த வெள்ளைப்பூண்டு என்பது இவ்வாறான பல்வேறு மருத்துவ பயன்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது "