2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.
2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.
பட்ஜெட்டுக்கு முன்பாகவே, ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கும் ‘பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா’ திட்டம் தொடரும் என மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே உறுதி அளித்துள்ளார்.
மேலும், ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கும் திட்டம் நீடிக்கும் – ஒவ்வொரு மாதமும் ஐந்து கிலோ தானியம் இலவசம் வழங்கப்படும். போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாகும் – ‘போதை இல்லாத இந்தியா’ (Drug-Free India) பிரச்சாரத்திற்கும் கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.
விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் வேலையில்லாதவர்களுக்கு புதிய திட்டங்கள் – வேலைவாய்ப்பை மேம்படுத்தும் திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார்.