இணையத்தள மற்றும் ஆன்லைன் மோசடிகள் இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருகிறது.
இணையத்தள மற்றும் ஆன்லைன் மோசடிகள் இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருகிறது. வங்கி அதிகாரியாக நடித்து அழைப்புகள் செய்வது, தவறான SMS மூலம் தகவல் திருடுவது போன்ற பல்வேறு வழிகளில் மக்கள் பணத்தை இழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மோசடிகளை தடுக்க முக்கியமான இரண்டு எண் தொடர்களை அறிமுகப்படுத்தியுள்ளது:
1600 தொடக்க எண்ணில் இருந்து வரும் அழைப்புகள் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ அழைப்புகள் மட்டும் இந்த வரிசையில் இருக்கும். மற்ற எண்களில் இருந்து வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம்.
1400 தொடங்கும் எண்களில் இருந்து வரும் அழைப்புகள் மற்றும் SMS – மார்க்கெட்டிங், தனிநபர் கடன், காப்பீடு போன்ற விளம்பர தொடர்புகளுக்கே பயன்படுத்தப்படும். இதைத் தவிர மற்ற எண்களில் இருந்து வரும் வணிக அழைப்புகளை நம்ப வேண்டாம்.
இந்த புதிய RBI நடைமுறைகள், வாடிக்கையாளர்களை மோசடி அழைப்புகளிடமிருந்து பாதுகாக்க தயாரிக்கப்பட்டுள்ளது. வங்கியியல் தொடர்பான தகவல்களை பகிரும் முன் எண்ணை சரிபார்த்து உறுதிப்படுத்துங்கள்.