Fennel Seeds Health Benefits - பெருஞ்சீரகம் என அழைக்கப்படும் சோம்புவின் பயன்கள் குறித்து இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.
நாம் சாதாரணமாக நம் சமையலில் பயன்படுத்தும் பெருஞ்சீரகத்தில் என்ன என்ன நன்மைகள் இருக்கிறது தெரியுமா, iந்த பெருஞ்சீரகத்தில் உள்ள அனெத்தோல் என்ற கலவை ஆனது செரிமான சாறுகள் மற்றும் நொதிகளின் சுரப்பைத் வெகுவாக தூண்டுகிறது, இது செரிமானத்தை மேம்படுத்துவது மட்டும் அல்லாமல் வாய்வு, அஜீரணம் போன்ற பிரச்சனைகளை குறைக்கிறது.
பெருஞ்சீரகத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது பசியைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் உடல் எடையை குறைக்க உதவுகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் பெருஞ்சீரக தண்ணீர் குடித்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும், மேலும் இது வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது, பெருஞ்சீரகத்தில் உள்ள பொட்டாசியம் இரத்த நாளங்களை விரிவுபடுத்தி இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
பெருஞ்சீரகத்தில் ஆன்டி-ஆக்சிடன்கள் மற்றும் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது, பெருஞ்சீரக தண்ணீர் ஒரு வாரத்திற்கு ஒரு முறை பருகி வந்தால் உடலில் இருக்கும் நச்சுக்களை எல்லாம் வெளியேற்றி சிறுநீரக பாதுகாப்பிற்கு பெருமளவில் உதவி புரியும், பெருஞ்சீரகத்தில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது, இது கண் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
வாய்ப்புண் மற்றும் வாய் துர்நாற்றத்தை குறைக்கிறது, பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளை குறைக்கிறது, பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கிறது, இதை உணவிலோ அல்லது தண்ணீரில் 10 மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி நீராகவோ பருகலாம், வீட்டில் எப்போதும் இருக்கிற இந்த சோம்பு இத்துனை நன்மைகள் புரிகிறது என்றால் தினமும் எடுத்துக் கொள்ளலாம் தானே.