உடலில் மிகப்பெரிய உட்கருவாக விளங்கும் கல்லீரல் (Liver) நம் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்காற்றுகிறது.
உடலில் மிகப்பெரிய உட்கருவாக விளங்கும் கல்லீரல் (Liver) நம் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்காற்றுகிறது. செரிமானத்திற்கு தேவையான பித்த சாறுகளை சுரப்பது மட்டுமின்றி, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் பணியையும் இது செய்கிறது.
கல்லீரல் கோளாறுகளுக்கான காரணங்கள்:
துரித உணவுகள், கொழுப்புச்சத்து அதிகமான உணவுகள், மேலும் ஒழுங்கற்ற உணவு பழக்கவழக்கங்கள் கொழுப்பை அதிகமாக சேர்த்துவிடுகிறது. இதனால் கொலஸ்ட்ரோல் பிரச்சனை உருவாகி, காலப்போக்கில் fatty liver (Hepatic Steatosis) எனப்படும் நிலையை ஏற்படுத்துகிறது. இது கல்லீரலை பாதிப்பதுடன், உடல் ஆரோக்கியத்தையே கெடுக்கும். மிக மோசமான நிலைக்கு சென்றால், கல்லீரல் செயலிழப்பு ஏற்படலாம்.
Fatty Liver நோயின் முக்கிய அறிகுறிகள்:
* உடல் எடை மாற்றம். குறிப்பாக வயிற்று பகுதியில் அதிகளவில் கொழுப்பு சேர்ந்து, உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி செய்தும் குறையவில்லை என்றால், அது fatty liver-க்கான முக்கிய எச்சரிக்கை.
*தடவுடல், உடல் வலுவிழப்பு, அடிக்கடி மயக்கம் போன்றவை கல்லீரல் செயல்பாடு சரிவதற்கான ஆரம்ப அறிகுறிகள்.
*வலது விலா எலும்பு பகுதியில் வலி அல்லது அசௌகரியம் இருந்தால், அது கல்லீரலில் ஏற்பட்ட வீக்கத்திற்கான அறிகுறியாக இருக்கலாம்.
*திடீரென முகப்பரு, கருமையான தோல் மடிப்புகள், அதிக முடி கொட்டுதல் போன்றவை கல்லீரல் கோளாறு காரணமாக ஏற்படலாம்.