நாட்டின் பல்வேறு பகுதிகளில் கள்ள நோட்டுகள் மீண்டும் பரவலாகக் கண்டறியப்பட்டு வருகின்றன. ரூ.500 போலி நோட்டுகள் ஏற்கனவே மிகப்பெரிய பிரச்சனையாக இருந்த நிலையில், தற்போது ரூ.200 நோட்டுகளும் போலியாக அச்சிடப்பட்டு வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவின் நிர்மல் மாவட்டத்தில், வணிகர்கள் ரூ.200 நோட்டுகளைப் பார்த்து பயப்பட தொடங்கியுள்ளனர். சிலர் சில்லறைத் திருப்ப விரும்பாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இது அந்த பகுதியில் வர்த்தக நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.
இந்த போலி ரூபாய் நோட்டுகள் உயர் தரத்தில் வண்ண ஜெராக்ஸ் மூலம் அச்சிடப்படுகின்றன.
நோட்டுகளின் தடிமன்,வண்ண அமைப்பு,மேலும் அதன் படம் மற்றும் சின்னங்கள்,
எல்லாவற்றும் உண்மையான ரூபாய் போலவே இருக்கும். இதனால், போலி நோட்டுகளை கண்டுபிடிப்பது கடினமாக இருப்பதாக கூறப்படுகிறது.