உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க், அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் பெரும் நிலத்தை கைப்பற்றியுள்ளார். இதன் மூலம், தன்னுடைய நிறுவனங்களின் முக்கிய மையமாக டெக்சாஸை உருவாக்கும் திட்டத்தில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
எலான் மஸ்க் 426 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன், உலகின் பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ளவர். மின்சார வாகனத் துறையில் டெஸ்லா, விண்வெளித் தொழில்நுட்பத்தில் ஸ்பேஸ் எக்ஸ், சுரங்க பாதை வடிவமைப்பில் போரிங் நிறுவனம் என புதுமைகளை உருவாக்கும் நிறுவனங்களை வழிநடத்துகிறார்.
4400 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை, 3.4 பில்லியன் டாலர்கள் செலவில் வாங்கியுள்ளார்.
இந்த நிலம், மஸ்க் நிறுவனம் செயல்படும் தொழில்நுட்ப மையங்களுக்காக பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது. எலான் மஸ்க் எது செய்தாலும், அதில் பெரும் எதிர்கால திட்டங்கள் இருக்கும்.
இந்த நிலத்தை டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் போரிங் நிறுவனங்களின் முக்கிய திட்டங்களுக்கு பயன்படுத்தும் நோக்கம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.