Electric Motor Pump Set Subsidy Scheme - பொதுவாக அரசு, நாட்டின் முதுகெலும்பாக கருதப்படும் விவசாயத்தை தொடர்ந்து நாட்டில் முன்னிறுத்த விவசாயிகளுக்கு தொடர்ந்து பல்வேறு மானியங்களையும் திட்டங்களையும் அறிவித்து வருகிறது, அந்த வகையில் இந்த மானிய விலையிலான மின் மோட்டார் பம்ப் செட் திட்டமும் வேளாண் விவசாயிகளுக்கான திட்டத்தில் இடம் பிடித்து இருக்கிறது,
இத்திட்டத்தின் கீழ் பயன் பெற நினைக்கும் விவசாயிகள் 5 ஏக்கருக்குள் நிலம் வைத்து இருக்க வேண்டும், நிலத்தில் பம்ப் செட் மூலம் நீர் எடுப்பதற்கான, நீர் ஆதாரம் இருக்க வேண்டும், மின் இணைப்பு நிச்சயம் இருக்க வேண்டும், இத்தகைய விவசாயிகள் மட்டுமே இந்த மானிய விலை மின் மோட்டார் பெறுதலுக்கு தகுதியானவர்களாக கொள்ளப்படுவார்கள்,
இத்திட்டத்தின் கீழ் மோட்டார் விலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ 15,000 வரை அரசு மானிய உதவி வழங்கும், இத்திட்டத்தின் கீழ் பயன்பெற நினைக்கும் வேளாண் விவசாயிகள், மாவட்ட வேளாண் இயக்குநகரத்தை அணுகி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும், அவர்கள் ஆராய்ந்து உங்களது முறையீட்டை அனுமதிக்கும் பட்சத்தில் உங்களுக்கு மானிய விலையின் மின் மோட்டார்கள் வழங்குவது உறுதி செய்யப்படும்.
ஆன்லைனிலும் இத்திட்டத்திற்கு எப்படி பதிவு செய்வது?
1) முதலில் https://www.tnagrisnet.tn.gov.in/KaviaDP/scheme_register இந்த லிங்கிற்குள் செல்ல வேண்டும்.
2) துறை பிரிவில் வேளாண் பொறியியல் துறை, திட்டம் பிரிவில் மானியத்தில் மின் மோட்டார் பம்ப் செட்டுகளை தேர்வு செய்ய வேண்டும்,
3) பின்னர் நார்மலான பெர்சனல் விவரங்கள், ஆதார் உள்ளிட்டவைகளை உள்ளிட வேண்டும்,
4) புகைப்படத்தை பதிவிட்டு, நிலம் குறித்த விவரங்கள், முகவரி, வங்கி கணக்கு விவரங்களை உள்ளிட்டு அப்ளிகேசனை சமர்ப்பித்தால் வேலை முடிந்து விடும்.
5) வேளாண் பொறியாளர் உங்கள் அப்ளிகேசனை அப்ரூவ் செய்யும் பட்சத்தில் உங்களுக்கு மின் மோட்டாருக்கான மானியம் கிடைக்கும்.