Education Loan Settlement Impacts - பொதுவாக கல்ல்விக்கடனை செட்டில்மென்ட் மூலம் அடைத்தால் என்ன என்ன பிரச்சினைகள் வரும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Education Loan Settlement Impacts - ஏழை எளிய மாணவர்கள் பணம் இல்லாமல் மேல் கல்வியை தொடர முடியாமல் போகும் நிலை நீடித்ததால் பலரும் பள்ளிப்படிப்போடு நிற்கும் நிலை ஒரு சமயத்தில் ஏற்பட்டது, இந்த பிரச்சினையை களையவே அரசு வங்கிகள் மூலம் கல்விக்கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது, இந்த கல்விக்கடன் திட்டத்தின் மூலம் மாணவர்கள் படிக்கும் வரை தொகையோ தவணையோ வட்டியோ கட்ட தேவை இல்லை,
படித்து முடித்து ஒரு வருடம் கழித்து கடனை திருப்பி மாத தவணையாகவோ அல்லது மொத்தமாகவோ கட்டலாம், ஆனால் இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் படிக்கும் காலத்தில் கடனுக்கான வட்டியை அரசு கட்டி அடைக்கும், ஆனால் பலருக்கும் அந்த வட்டி தொகை இத்திட்டத்தில் முறையாக கிடைப்பதில்லை, இதனால் படித்து முடிக்கும் போதே வாங்கிய கடன் பெருகி விடுகிறது,
வேலை வாய்ப்பும் உடனடியாக அமையாமல் இருப்பவர்களுக்கு இக்கடன் சுமையாகி விடுவதால் அப்படியே கட்டாமல் விட்டு விடுகின்றனர், பின்னர் வங்கிகள் மூலமாகவோ, லோக் அதலாத் மூலமோ செட்டில்மென்ட் வரும் போது ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் பேசி கடனை அடைத்து முடிக்கின்றனர், அவ்வாறாக முடிக்கும் போது கடன் அடைகிறது என்னும் மகிழ்ச்சியில் கட்டியும் விடுகின்றனர்,
சரி அந்த செட்டில்மென்டால் என பிரச்சினை வரும் என்று கேட்டால், சிபில் ஸ்கோரில் ஒரு மார்க் அல்லது ஸ்ட்ரைக் விழுந்து விடும், எதிர்காலத்தில் நீங்கள் நல்ல வேலையில், நல்ல சம்பளத்தில் இருந்து, நல்ல சிபில் ஸ்கோர் இருந்தாலும் கூட அந்த ஸ்ட்ரைக்கை குத்தி காட்டி வங்கிகள் லோன் தர மறுக்கும், அந்த ஸ்ட்ரைக்கை வாழ்நாள் முழுக்க எடுக்க முடியாத நிலை ஏற்பட்டு ஒரு அவசரத்திற்கு லோன் எடுக்க முடியாமல் போய்விடும்.
" சரி சிபிலில் விழுந்த அந்த ஸ்ட்ரைக்கை எப்படி எடுப்பது என கேட்டால் கல்விக்கடன் எடுத்த வங்கியை அணுகி, கட்டினது போக மீதமுள்ள தொகையை, அந்த நாள் வரை வட்டியுடன் கட்ட வேண்டி வரும், அது நீங்கள் வாங்கிய கடனை விட பன் மடங்காக கூட இருக்கலாம் "