• India

வெளிநாடுகளில் படிப்பதற்கு...வங்கிகளில் கல்விக்கடன் பெறுவது எப்படி...?

Education Loan Details in Tamil​ | Vidyalakshmi Education Loan in Tamil​

By Ramesh

Published on:  2024-12-17 15:43:19  |    71

Education Loan Details in Tamil​  - வெளிநாடுகளில் படிக்க ஆசைப்படும் மாணவர்கள் இந்திய வங்கிகளில் கடன் பெறுவது என்பது தற்போது சுலபமாக்கப்பட்டு இருக்கிறது, இத்திட்டத்தின் மூலம் பொதுத்துறை வங்கிகளில் 1 இலட்சம் மூலம் 1.5 கோடி வரை ஒருவர் கடன் பெற முடியும், ஒரு சில தனியார் வங்கிகள் 3.5 கோடி வரை கடன் வழங்குகின்றன, 7.5 இலட்சம் வரை எந்த சொத்து அடமானமும் இல்லாமல் கடன் வழங்கப்படுகிறது.

கடன் தொகை, 7.5 இலட்சத்திற்கு மேல் செல்லும் போது சொத்து விவரங்களை வங்கிகளிடம் விவரிப்பது என்பது அத்தியாவசியமாகிறது, பொதுவாக மாணவர்கள் நேரடி நியமனங்கள் அல்லது Entrance எக்ஸாம் மூலம் வெளிநாடுகளுக்கு படிக்க செல்கிறார்கள், நேரடி நியமனம் என்னும் போது எந்த கல்லூரியில் சேர்கிறார்களோ அதற்கான நியமன ஆணை தேவைப்படும்.



நுழைவுத்தேர்வு மூலம் ஒரு மாணவர் செல்கிறார் என்றால் அந்த நுழைவுத்தேர்வில் பாஸ் ஆனதற்கான விவரங்கள் வங்கிகளில் சமர்ப்பித்திடல் வேண்டும், பாஸ்போர்ட், கல்லூரியின் முழுக்கட்டணம் அடங்கிய ஒரு Bonafide சர்டிபிகேட், பாஸ்போர்ட், மாணவர்களுக்கான விசா நகல், கடன் தொகை 7.5 இலட்சத்திற்கு மேல் செல்லும் போது சொத்து விவரங்களையும் சமர்ப்பித்திடல் வேண்டும்.

வட்டி வீதம் படிக்கும் போதே தனிவட்டி வீதமாக துவங்கி விடும், 15 ஆண்டு காலம் வரை கடனை திருப்பி செலுத்த அவகாசம் கொடுக்கப்படும், படித்து முடித்துவிட்டு கடனை திருப்பி செலுத்தும் காலத்திற்கு 6 மாசம் அவகாசம் கொடுக்கப்படும், இந்தியாவிலிருந்து கல்லூரி இருக்கும் நாட்டிற்கு செல்லும் விமான டிக்கெட் முதல் அனைத்தும் இந்த கல்விக்கடன் மூலம் பெற முடியும்.

" வட்டி வீதம் 10.10% முதல் 13.50% வரை வாங்கும் கடன் தொகை மற்றும் வங்கிகளை பொறுத்து மாறுகிறது "