• India
```

Education Loan Details In Tamil -ரூ.10 லட்சம்..மானியத்துடன் கல்விக்கடனா!?மாணவர்களுக்கு அறிய வாய்ப்பு..!

Education Loan Details In Tamil | Education Loan Details

Education Loan Details In Tamil -கல்லூரியில் மருத்துவம், பொறியியல், தொழில்துறை, கலை, அறிவியல் போன்ற படிப்புகளுக்கான கல்விக்கடன் பெறுவதற்கு வங்கியில் விண்ணப்பிக்கலாம்

Education Loan Details In Tamil -மதுரை மாவட்டம்,

மதுரை மாவட்ட நிர்வாகம், வங்கி நிர்வாகம், மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் இணைந்து, சிறப்பாக ஆறாவது ஆண்டு கல்விக் கடன் திருவிழாவை இன்று, 29.08.2024 (வியாழக்கிழமை) காலை 09.00 மணிக்கு மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி கலையரங்கில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் மதுரை மாவட்டம் 500 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கி சாதனை படைத்த மாவட்டமாக பெயர் பெற்றுள்ளது.

கல்விக்கடன் பெற,

இந்த ஆண்டு, மருத்துவம், பொறியியல், மற்றும் தொழில்துறை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு, கலந்தாய்வு, மற்றும் நேரடி சேர்க்கைக்கு மாணவர்களுக்கு கல்விக் கடன் கொடுக்கப்படவுள்ளது.மேலும்,கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் வங்கிகள் கல்விக்கடன் கொடுக்கின்றது.

கல்விக் கடன் பெறுவதற்கு, குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 4,50,000/-க்குள் உள்ள மாணவர்கள், கடன் தொகையில் அதிகபட்சம் ரூ. 10,00,000/- வரை பெற்றுக்கொள்ளலாம். மேலும் அதற்குரிய வட்டி படிக்கும் காலங்களுக்கு முழுமையாக மானியமாக வழங்கப்படுகிறது.வங்கியில் கல்விக்கடன் பெறுவதற்கு மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதளம் மூலம் கல்விக் கடன் பெற விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

கல்வி கடன் முகாமிற்கு தேவைப்படும் ஆவணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. ஆதார் அட்டை

2. 10/12-ம் வகுப்பு கல்வித் தகுதி சான்று

3. கலந்தாய்வு சான்று, அதாவது Counselling Letter

4. மாற்று சான்றிதழ், அதாவது Transfer Certificate

5. கல்லூரி அட்மிஷன் கடிதம்

6. கட்டண விபரம்

7. Approval/Affiliation சான்று

8. பான் கார்டு

9. சாதி சான்று

10. பெற்றோர் ஆண்டு வருமான சான்று

11. முதல் பட்டதாரி சான்று மற்றும் உறுதி மொழி சான்று

12. கடன் பெறும் வங்கியின் பெயர் மற்றும் வங்கி புத்தகம்

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கேட்டுக் கொண்டுள்ளார். கல்விக் கடன் பெறுவது சவாலாக உள்ள சூழலில், இதனை எளிமையாக்க அவர் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும், இதனை பற்றி தெரியாமல் தவிர்க்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கான விழிப்புணர்வு முகாம்களும் நடத்தப்படுவதால், இது மிகவும் வரவேற்கத்தக்கதாக உள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola