DGCA தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டில் 16.1 கோடி பயணிகள் உள்நாட்டு விமானங்களை பயன்படுத்தியுள்ளனர்.
DGCA தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டில் 16.1 கோடி பயணிகள் உள்நாட்டு விமானங்களை பயன்படுத்தியுள்ளனர், இது முந்தைய ஆண்டின் 15.2 கோடியை விட 6% அதிகம். இந்த வளர்ச்சியால் உள்நாட்டு விமானப் போக்குவரத்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
விமான நிறுவனங்களில் இண்டிகோ 61.9% பங்குடன் முன்னணியில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஏர் இந்தியா குழுமம் (ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்) 28.4% பங்குடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆகாசா 4.6% மற்றும் ஸ்பைஸ்ஜெட் 3.7% பங்குகளைக் கொண்டுள்ளன.
2024 டிசம்பரில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து 1.5 கோடியை எட்டியுள்ளது, இது 2023 டிசம்பரில் இருந்த 1.4 கோடியை விட 8% அதிகம்.
மத்திய விமானப் போக்குவரத்துச் செயலர் வும்லுன்மாங் வுவல்னம் கூறுகையில், கடந்த பத்தாண்டுகளில் (2014-2024) மொத்த விமானப் பயணிகள் எண்ணிக்கை 16 கோடியிலிருந்து 38 கோடியாக உயர்ந்துள்ளது என்றும் எதிர்வரும் காலங்களில் வளர்ச்சி தொடர்ந்து வேகமெடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.