Documents Required For Temple Wedding - பொதுவாக இந்து அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் அனைத்து கோவில்களிலும் திருமணம் முடிக்க முறையாக ஒரு சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் ஆகிறது.
நம்மில் ஒரு சிலர் திருமணத்தை ஏதாவது கோவிலில் வைத்து நிகழ்த்தினால் நன்றாக இருக்கும் என யோசிப்பார்கள், அது குல தெய்வ கோவிலோ அல்லது ஏதாவது அறநிலையத் துறையின் கீழ் வராத கோவிலோ என்றால் வெறுமனை பந்தல் மட்டும் போட்டு திருமணத்தை அங்கேயே நிகழ்த்தி விடலாம், ஆனால் அறநிலையத்துறையின் கீழ் ஒரு கோவில் வருகிறதென்றால் அதற்கு ஒரு சில கட்டுப்பாடுகள் இருக்கிறது.
சரி அப்படி என்ன கட்டுப்பாடுகள் என்றால், முதலில் திருமணத்திற்கு பதிவு செய்யும் ஆணும் பெண்ணும் இந்து மதத்தினராக இருப்பது அவசியம், அதை நிரூபிக்கும் வகையில் ஏதாவது ஒரு சான்றும் கையில் இருக்க வேண்டும், முக்கியமாக மாற்று சான்றிதழ் அல்லது சாதி சான்றிதழ்களில் தான் மதம் என்பது குறிப்பிடப்பட்டு இருக்கும், ஆதலால் அந்த இரண்டில் ஏதாவது ஒன்றை ஆவணங்களாக சமர்ப்பிக்கலாம்.
சரி முக்கியமாக என்ன என்ன ஆவணங்கள் தேவைப்படும் என்றால், முதலில் திருமணமாகாத சான்றிதழ் எனப்படும் முதல் திருமண சான்றிதழ் என்பது அவசியம், அதை ஈ சேவை மையத்தில் பதிவு செய்து பெற்றுக்கொள்ள வேண்டும், இருவருக்கும் பெறுவது அவசியம், பின்னர் இருவரின் ஆதார், இருவரின் பள்ளி கல்வி சான்றிதழ்கள், சாதி சான்றிதழ் (தேவைப்படலாம்), பாஸ்போர்ட் சைஸ் போட்டோ,
இது போக முக்கியமாக திருமண அழைப்பிதழும் சமர்ப்பிக்க வேண்டும், எங்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றால் அறநிலையத்துறையின் கீழ் இருக்கும் பெரும்பாலான கோவில்களில் அறநிலையத் துறை அலுவலகம் கோவிலுக்கு உள்ளேவே இருக்கிறது, அங்கு தான் நீங்கள் இந்த ஆவணங்களை எல்லாம் சமர்ப்பித்து திருமணத்தை உறுதி செய்ய வேண்டும்.