• India

Credit card பயன்படுத்தும் போது ஏற்படும் பிரச்சனைகள்.. வாங்க தெரிந்துகொள்ளலாம்!!

Disadvantages of credit card usage

By Dhiviyaraj

Published on:  2025-01-09 21:32:31  |    39

Credit Card பயன்படுத்துவதற்கு முன்பு அதில் இருக்கும் நன்மைகள் தீமைகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று என்று பல நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த Credit Card பயன்படுத்தும் போது ஏற்படும் சவால்கள் தொடர்பாக இன்று பார்க்கலாம் வாங்க. 

அதிக வட்டி விகிதம்!!

இயல்பு வழி கடன்களை காட்டிலும், credit card மூலம் பொருட்களை வாங்கும் போது வட்டி அதிகமாகவே இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.  


மறைமுக கட்டணங்கள்!!

credit card பரிவர்த்தனைகளின் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு கட்டணங்கள் செலுத்த வேண்டியது இருக்கும். இதை பற்றிய புரிதல் இல்லாத நபர்களுக்கு பெரிய அளவில் நஷ்டங்கள் ஏற்படும்.

ஆண்டு கட்டணம்!!

ஒரு சில வகை credit card -களுக்கு ஆண்டு சந்தா செலுத்த வேண்டிய அவசியம் இருக்கும். credit card முற்றிலும் பயன்படுத்தவில்லை என்றாலும் இந்த கட்டணத்தை பயன்படுத்த வேண்டும். தேவையில்லாமல் பணத்தை செலுத்த வேண்டிய பிரச்சனை இருக்கும்.


அதிக செலவு!!

கையில் இருக்கும் பணத்தை அளவாக பயன்படுத்தும் நாம், credit card மூலமாக நிறைய பணத்தை செலவு செய்ய நேரிடும் என்று பல ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.