தாய்லாந்தை சேர்ந்த பிரபல மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்று காதலர்கள் டேட்டிங் செல்ல சம்பளத்துடன் விடுப்பு தருவதாக அறிவித்து இருக்கிறது.
பொதுவாக உலகளாவிய பல நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை ஊக்கப்படுத்துவதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கனடாவில் ஒரு நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு 6 மணி நேரம் மட்டுமே வேலை கொடுக்கிறதாம். முதலில் 8 மணி நேரம், வேலை நேரம் வைத்து இருந்ததை காட்டிலும் தற்போது உற்பத்தி நன்றாகவே அதிகரித்து இருக்கிறதாம். பிரான்ஸ்சில் ஒரு நிறுவனம், ஊழியர்களை அலுவலகத்திலேயே தினம் ஒரு மணி நேரம் தூங்க அனுமதிக்கிறதாம். சீனாவில் ஒரு நிறுவனம் ஊழியர்களுக்கு ’Sad Leave' என்ற பெயரில், வருடத்திற்கு 10 நாள் விடுப்பு வழங்குகிறதாம். அதாவது ஊழியர்கள் மிகவும் மன இறுக்கத்திலோ அல்லது ஏதோ ஒரு காரணத்தால் மனம் உடைந்து இருந்தாலோ, அவர்கள் அன்றைய நாள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு அன்றைய நாள் சம்பளத்துடன் விடுப்பு வழங்கப்படும், இவ்வாறாக சின்ன சின்ன விடயங்கள் ஊழியர்களின் வேலைத்திறனை ஊக்கு
சரி, வேலை நேரம் குறைப்பு, தூக்கத்திற்கு நேரம், கவலையாக இருந்தால் விடுப்பு எல்லாம் ஒகே, அது என்ன டேட்டிங் செல்ல விடுப்பு?
தாய்லாந்தில் இருக்கும் ஒரு பிரபல மார்க்கெட்டிங் நிறுவனமான ஒயிட்லைன் குரூப்ஸ், தங்களது ஊழியர்கள் அவர்களது காதலர்களுடன் டேட்டிங் செல்ல சம்பளத்துடன் விடுப்பு கொடுப்பதாக அறிவித்து இருக்கிறது. இது குறித்து நிறுவனத்திடம் விளக்கம் கேட்ட போது, ’காதல் உள்ளத்தை மகிழ்விக்கும், உள்ளம் மகிழ்ந்தால் ஊழியர்கள் வேலையிலும் சிறப்பாக செயல்படுவார்கள்’ என்று கூறி இருக்கிறது. இது மட்டும் அல்லாமல் தங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் 6 மாதத்திற்கு டிண்டர் எனப்படும் டேட்டிங் செயலியின் பிளாட்டினம் மற்றும் கோல்டு வெர்சனை நிறுவனமே வழங்குகிறதாம்.
“ ஆஹா, ஆஹா என்னவொரு நிறுவனம் என கேட்க தோன்றுகிறது அல்லவா?, ஹ்ம், அப்படியே நீங்க இப்ப உங்க நிறுவனத்த பார்ப்பீங்களே, நிறுவனத்தின் மைண்ட் வாய்ஸ், இதெல்லாம் நீ கனவுல கூட நினைச்சு பாக்க கூடாது “