ஐரோப்பாவில் மேற்கொண்ட பரிசோதனையில் சில கோகோ கோலா பானங்களில் குளோரேட் என்ற ரசாயனம் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம் காணப்பட்டது.
உலகம் முழுவதும் பிரபலமான குளிர்பான நிறுவனங்களில் COCA COLA முக்கியமான ஒன்று. இது பல்வேறு ருசிகளில் குளிர்பானங்களை விற்பனை செய்து வருகிறது.
ஐரோப்பாவில் மேற்கொண்ட பரிசோதனையில் சில கோகோ கோலா பானங்களில் குளோரேட் என்ற ரசாயனம் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம் காணப்பட்டது. இதனால், பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து சில தயாரிப்புகளை திரும்ப பெறும் நடவடிக்கையை நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
கோக், ஃபாண்டா, மினிட் மெய்ட், ஸ்ப்ரைட், டிராபிகோ போன்ற பிராண்டுகள் இதில் அடங்கும். இங்கிலாந்தில் உள்ள கோகோ கோலா தயாரிப்புகளிலும் இதே பிரச்சனை உள்ளதா என்பதை உணவு தர நிர்ணய நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.
குளோரேட் என்பது நீர் சுத்திகரிப்பிற்கும் உணவு பதப்படுத்துதலுக்கும் பயன்படும் ஒரு கிருமிநாசினி ரசாயனமாகும். இது சிறுவர்கள் மற்றும் குழந்தைகளில் அயோடின் குறைபாட்டை ஏற்படுத்தக்கூடும். ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையத்தின் அறிக்கையின் படி, நீண்ட கால குளோரேட் தாக்கம், அயோடின் குறைவுள்ளவர்களுக்கு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.