Chinese And Tamil Relationship - பொதுவாகவே சீனர்களுக்கும் தமிழுக்கும் ஒரு பூர்வ பந்தம் இருப்பதாக கூறப்படுகிறது, அது என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சீனர்களுக்கும் தமிழுக்கும் இடையிலான தொடர்பை அறிந்து கொள்ள வேண்டுமானால் நாம் குறைந்தது ஒரு 3000 ஆண்டுகளாவது பின்னோக்கி செல்ல வேண்டும், சோழர்கள், பல்லவர்கள் காலத்தில் தமிழர்களுக்கும் சீனர்களுக்கும் இடையில் ஒரு மிகப்பெரிய வர்த்தகமும், பரிமாற்றமும், நட்புறவும் இருந்ததற்கான பல சான்றுகள் தமிழ் இலக்கியத்தில் இருக்கின்றன.
சீன துறவிகள் பலரும் காஞ்சியில் வந்து இலக்கிய உணர்வுகளையும், தமிழையும் கற்றுக் கொண்டு சீனாவில் தமிழுணர்வை பரப்பியதற்கான பல வரலாறுகள் இருக்கின்றன, என்ன தான் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் இருக்கும் பகை சுதந்திர காலக்கட்டத்தில் இருந்தே தொடர்ந்தாலும், சீனர்களுக்கும் தமிழுக்கும் இடையிலான உறவு என்பது இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
காஞ்சிபுரம் சங்ககால தமிழகத்தில், புத்த துறவிகள் பலர் வாழ்ந்த மையநகரமாக பார்க்கப்படுகிறது, சீனாவில் இருந்து வந்து பல துறவிகளும் காஞ்சியில் தங்கி கல்வி கற்று சென்று இருக்கின்றனர், தமிழ் கலாச்சாரங்களை சீனாவிற்கு பரப்பி இருக்கின்றனர், இன்றும் சீனாவில் இருக்கும் ஒரு சில பல்கலையில் தமிழுக்கு என்று தனி டிபார்ட்மெண்ட் இருக்கிறது.
சீனர்கள் தமிழ் கற்றுக் கொள்ளவும் தமிழ் கலாச்சாரங்களை பற்றி தெரிந்து கொள்ளவும் அங்கு அனுமதிக்கப்படுகின்றனர், ஒரு சில சீனர்கள் தமிழ் கற்றுக் கொண்டு தங்களை தமிழர்களாக அடையாளப்படுத்துக் கொண்டு, தங்களுக்கு தமிழ் பெயர்களையும் சூட்டிக் கொள்கின்றனர், அந்த வகையில் தமிழுக்கும் சீனர்களுக்கும் இடையிலான உறவு இன்னும் நீடிப்பதாகவே கருதப்படுகிறது.