• India
```

கார் இன்சூரன்ஸ் ஆவணங்கள் பறிபோனால் கவலைப்பட வேண்டாம்..மீண்டும் பெற 6 எளிய வழிகள்..!

Car Insurance Duplicate Copy | Duplicate Insurance Copy

Car Insurance Duplicate Copy -இரண்டு சக்கர வாகனங்களை வாங்குபவர்களை விட காரின் மேல் மோகம் உள்ளவர்களே அதிகமாக இருக்கிறார்கள்.விலை உயர்ந்த கார்களை சிலரே வாங்குகிறார்கள்.மேலும், பலர் சிறு சிறு தொகைகளை சேமித்து, கார்கள் வாங்குகிறார்கள். 

பெரும்பாலும், கார் ஓட்டுவதில் கவனம் செலுத்துபவர்கள் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வருவத்தில்லை.காரை சாலையில் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும், எதிர்பாராத விபத்துகள் அல்லது திருட்டுகளிலிருந்து பாதுகாப்பதற்கும் கார் இன்சூரன்ஸ் மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.

ஆனால், கார் இன்சூரன்ஸ் ஆவணங்களை தவறவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த பதிவில் டூப்ளிகேட் கார் இன்சூரன்ஸ்-ஐ எவ்வாறு பெறுவது என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.


கார் இன்சூரன்ஸ் பாலிசி ஆவணங்கள், நீங்கள் கார் வாங்கிய பிறகு கார் இன்சூரன்ஸ் பாலிசி வாங்கினால், காப்பீட்டு நிறுவனம் உங்களுக்கு பாலிசி ஆவணத்தை வழங்கும். மேலும், இந்த ஆவணத்தில் பல முக்கிய தகவல்கள் இருக்கிறது.

காப்பீட்டு நிறுவன விவரங்கள்: பாலிசியை வாங்கிய தேதி, பாலிசி செல்லுபடி ஆகும் தேதி, தொடங்கும் தேதி மற்றும் பாலிசி நடைமுறையில் இருக்கும் தேதி.

வாகன விவரங்கள்: கார் பதிவு எண், இன்ஜின் மற்றும் சேஸ் நம்பர், வாகன தயாரிப்பு விவரங்கள் மற்றும் மாடல் விவரங்கள்.

மதிப்பு மற்றும் நன்மைகள்: விரிவான கார் காப்பீட்டை வாங்கியிருந்தால், உங்கள் காரின் மதிப்பு தொடர்பான தகவல்களும், தேவையானால் உரிமைகோரக்கூடிய தொகை பற்றிய தகவல்களும் காணப்படும்.

ஆட்-ஆன்கள் மற்றும் தள்ளுபடிகள்: நீங்கள் வாங்கிய பாலிசியில் உள்ள ஆட்-ஆன்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனத்தால் வழங்கப்படும் தள்ளுபடிகள் பற்றிய விவரங்கள்.


டூப்ளிகேட் கார் இன்சூரன்ஸ் : 

உங்களுடைய கார் இன்சூரன்ஸ் ஆவணங்களின் டூப்ளிகேட் நகலைப் பெறுவதற்கான வழிகள்:

1. மெயிலைப் சரிபார்க்கவும்: அதிகமாக காப்பீட்டு நிறுவனங்கள் ஆன்லைனில் செயல்படுகின்றன. பாலிசி வாங்கும்போது, காப்பீட்டு நிறுவனம் உங்கள் மெயில் ஐடிக்கு பாலிசியின் PDF நகலை அனுப்பும். மெயிலில் இருந்து அதை பெறி, பிரிண்ட் செய்து வைத்துக் கொள்ளலாம்.

2. இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அப்ளிகேஷன் அல்லது வாட்ஸ் அப் சப்போர்ட்: பல காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் அப்ளிகேஷன்களை வழங்குகின்றன. அதிலிருந்து டூப்ளிகேட் பாலிசியைப் பெறலாம். கூடுதலாக, சில நிறுவனங்கள் வாட்ஸ் அப் வழியாகவும் சேவையை வழங்குகின்றன.

3. வாடிக்கையாளர் சேவை: காப்பீட்டு நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவையுடன் தொடர்புகொண்டு, அவர்கள் கேட்கும் விவரங்களை வழங்கினால், உங்கள் பாலிசியின் நகலை மின்னஞ்சல், தபால் அல்லது கொரியர் மூலமாகப் பெறலாம்.

4. அருகிலுள்ள அலுவலகம்: உங்கள் அருகிலுள்ள காப்பீட்டு நிறுவன அலுவலகத்தில் நேரடியாக சென்று, உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியை தொலைத்துவிட்டீர்கள் என்று கூறினால், அங்கு பணியாளர்கள் உங்கள் பாலிசியின் நகலை வழங்குவார்கள்.

5. ஷோரூமில் இருந்து: நீங்கள் கார் ஷோரூமில் இருந்து பாலிசி வாங்கினால், டீலரின் அலுவலகத்திற்குச் சென்று, பாலிசியின் நகலைப் பெறலாம்.

6. காப்பீட்டு முகவரிடமிருந்து: காப்பீட்டு முகவரின் மூலம் கார் காப்பீட்டை வாங்கினால், அவர்களை அணுகி, பாலிசியின் நகலைப் பெறலாம்.