Business News In Tamil -தர்மபுரி மாவட்டத்தில் விரைவில் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும். இதற்காக தமிழ்நாடு அரசு 462 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.இந்த திட்டத்தின் மூலம் தர்மபுரி, EV துறை நிறுவனங்களை ஈர்க்கும் முக்கிய மையமாக மாறுகிறது.ஏற்கனவே ஓலா உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீட்டை உறுதிப்படுத்தியுள்ளன.
Business News In Tamil -தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலருக்கு உயர்த்தவும், இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், மாநிலம் முழுவதும் சிப்காட் தொழிற்பூங்கா திட்டங்களை அரசு தற்பொழுது செயல்படுத்தி வருகிறது.
மேலும், பல ஆண்டுகளாக முடங்கியிருந்த தர்மபுரி சிப்காட் திட்டம் தற்போது முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி சிப்காட் பகுதிகளில் வெற்றிகரமாக பல தொழிற்சாலைகள் உருவானதால், தர்மபுரி சிப்காட் திட்டத்தின் அவசியம் அதிகரித்துள்ளது.
சிப்காட் நிர்வாகம் தர்மபுரி, நல்லம்பள்ளி மற்றும் அதகபாடி உள்ளிட்ட நான்கு கிராமங்களில் தொழிற்பூங்கா அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி கோரியுள்ளது. 1724.566 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் இந்த பூங்கா, 462 கோடி ரூபாய் முதலீட்டுடன், சுமார் 18,700 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பை உருவாக்கும் எனக் கூறப்படுகிறது.
அதோடு, கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரில் அமைந்துள்ள எலக்ட்ரிக் வாகன தொழில்துறை வளர்ச்சியை தொடர்ந்து, தர்மபுரி சிப்காட் EV துறையினை அதிகமாக ஈர்க்கும் மையமாக மாறவுள்ளது.