The Health Benefits of Black Raisins - உலர் கருப்பு திராட்சை என்று அழைக்கப்படும் Black Raisins பல்வேறு மருத்துவ குணங்கள் மிக்கது, அதன் தன்மை மற்றும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கருப்பு திராட்சைகளை ஓவன்களில் பதமான சூட்டில் நன்கு உலர வைத்து எடுக்கும் போது உலர் கருப்பு திராட்சை கிடைக்கிறது, பொதுவாக திராட்சைகளை 3 நாட்களுக்கு மேல் பயன்படுத்த முடியாது, ஆனால் உலர் திராட்சைகளை 6 மாதங்கள் வரை பயன்படுத்த முடியும், தரத்தை பொறுத்தும் உலர்த்தும் தன்மையை பொறுத்தும் ஒரு சில உலர் திராட்சைகளை ஒரு வருடம் கூட பயன்படுத்தலாம்.
சரி, இந்த உலர் கருப்பு திராட்சையில் அப்படி என்ன தான் பயன் இருக்கிறது என்றால், இது இதய நோய்களை குறைக்கும், இரத்த ஓட்டத்தை சீர்படுத்தும், இரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின்களை மேம்படுத்தும், இதில் இருக்கும் நார்ச்சத்து உடலில் இருக்கும் சர்க்கரையை நிலைப்படுத்துமாம், செரிமானத்தை தூண்டும், எலும்புகளை பலப்படுத்தும் எனவும் அறியப்படுகிறது,
அது மட்டும் அல்லாமல் இந்த உலர் கருப்பு திராட்சையில் இருக்கும் லூடின் மற்றும் ஜீயாக்சாந்தின் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்குமாம், இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதிலும் வல்லவைகளாக இருக்கின்றன, சரி இதை எப்படி எடுத்துக் கொள்ளலாம் என்றால் காலையில் வெறும் வயிற்றில் ஒரு 4 - 5 எடுத்துக் கொள்ளலாம்.
நீரிலோ, தேனிலோ ஒரு நான்கைந்து உலர் திராட்சைகளை ஊற வைத்தும் சாப்பிடலாம், வாரத்திற்கு ஒரு முறை தான் எடுத்துக் கொள்ள முடியும் என்றால் ஒரு 20 அல்லது 30 உலர் திராட்சைகளை நீரில் நன்கு கொதிக்க வைத்து, வற்ற வைத்து அந்த நீரை அப்படியே பருகலாம், அது ஒரு வாரம் சாப்பிட்ட தெம்பை ஒரே நாளில் கொடுக்கும்.
" மொத்தமாக இந்த உலர் திராட்சை பல்வேறு மருத்துவ பயன்களை கொண்டு இருக்கிறது, இதயநோய், சர்க்கரை நோயை தள்ளி வைக்க நினைப்பவர்கள் தினசரி ஏதாவது ஒரு வகையில் ஒரு நான்கைந்து உலர் திராட்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் "