இந்தியாவின் முன்னணி பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL), பொறியாளர் (Engineer Trainee) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor Trainee) பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL), பொறியாளர் (Engineer Trainee) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor Trainee) பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 400 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன, மேலும் இந்த பணிகளுக்கான ஊதிய அளவு ₹50,000 – ₹90,000 வரை வழங்கப்படும்.
கல்வித் தகுதி
*பொறியாளர் பயிற்சியாளர் (Engineer Trainee) – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து முழுநேர B.E./B.Tech./இரட்டை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
*சூப்பர்வைசர் பயிற்சியாளர் (Supervisor Trainee) – அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து குறைந்தபட்சம் 65% மதிப்பெண்களுடன் (SC/ST வேட்பாளர்களுக்கு 60%) முழுநேர டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச வயது 18 இருக்க வேண்டும் என்றும், அதிகபட்சம் வயது 27 இருக்கலாம் என்று நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த வேலைவாய்ப்பில் சேர ஆர்வமுள்ளவர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனமாக வாசித்து, விண்ணப்பம் தாக்கல் செய்ய தேவையான முக்கிய தேதிகள் மற்றும் விண்ணப்ப முறையை தெரிந்து கொள்ள வேண்டும்.