Best Low Interest Credit Cards - பொதுவாகவே கிரெடிட் கார்டுகளில் நன்மையும் இருக்கிறது, அதே சமயத்தில் ஆபத்தும் இருக்கிறது, ஏதாவது டெட்லைன் மிஸ் ஆகி நீங்கள் கிரெடிட் கார்டுகளுக்கான பில்லை கட்ட மறந்து விட்டீர்கள் என்றால் ஒரு வருடத்திற்கு அந்த தொகைக்கு 42 சதவிகிதம் வரை வட்டி கட்ட வேண்டி வரும், மாதத்திற்கு கிட்டதட்ட 4 சதவிகிதம், அதுவும் வட்டி என்பது 45 நாள் Interest Free காலத்திற்கும் சேர்த்து விழும் அது தான் இங்கு பிரச்சினையே.
சரி, அப்படி என்றால் வட்டி கம்மியான கார்டுகள் ஏதாவது இருக்கிறதா என்றால், ஆம் நிச்சயம் இருக்கிறது, ஆனாலும் வட்டி ரொம்ப கம்மி என்றெல்லாம் சொல்ல முடியாது ஓரளவிற்கு கம்மியாக இருக்கும். அவ்வளவு தான், என்ன இருந்தாலும் டெட்லைனுக்கு முன்னதாகவே பேமெண்ட் பண்ணி விடுங்கள், இந்த கார்டுகளில் வட்டி ஆனது கம்மி ஆக இருக்கும் அவ்வளவு தான்.
1) SBI Prime Advantage Credit Card: சேருவதற்கான கட்டணம் 2,999 ரூபாய், வருடாந்திர கட்டணம் 2,999 ரூபாய், மாதாந்திர வட்டி 1.99%, வருடாந்திர வட்டி 23.88%, கிரெடிட் ப்ரீ காலம் 50 நாட்கள்
2) SBI Advantage Plus Credit Card: சேருவதற்கான கட்டணம் 500 ரூபாய், வருடாந்திர கட்டணம் 500 ரூபாய், மாதாந்திர வட்டி 2.25%, வருடாந்திர வட்டி 27%, கிரெடிட் ப்ரீ காலம் 50 நாட்கள்
3) SimplySAVE Advantage SBI Card: சேருவதற்கான கட்டணம் 499 ரூபாய், வருடாந்திர கட்டணம் 499 ரூபாய், மாதாந்திர வட்டி 2.50%, வருடாந்திர வட்டி 30%, கிரெடிட் ப்ரீ காலம் 50 நாட்கள்
4) PNB Credit Card: சேருவதற்கான கட்டணம் 500 ரூபாய், வருடாந்திர கட்டணம் 500 ரூபாய், மாதாந்திர வட்டி 2.95%, வருடாந்திர வட்டி 35.89%, கிரெடிட் ப்ரீ காலம் 50 நாட்கள்