Ayushman Bharat Scheme Tamil - பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்களுக்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசு இணைந்து, ஆண்டுக்கு ரூ 5 இலட்சம் இலவச மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டம் தான் ஆயுஷ்மான் பாரத், இத்திட்டம் குறித்தும், இத்திட்டத்தில் இணைவது எவ்வாறு என்பது குறித்தும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Ayushman Bharat Scheme Tamil - இத்திட்டம் ஒன்றிய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது தமிழக அரசின் முதலமைச்சர் காப்பீடு திட்டத்துடன் இணைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது, இத்திட்டத்தின் கீழ் ஏழை எளியோர்களுக்கும் மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்களுக்கும், வருடத்திற்கு ரூ 5 இலட்சம் இலவச மருத்து காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக ஒன்றிய அரசு ஆயுஷ்மான் பாரத் மருத்துவ அட்டை ஒன்றையும் பயனாளர்களுக்கு வழங்கி வருகிறது.
இத்திட்டத்தினால் என்ன பயன்?
பொதுவாக ஒரு ஏழை பயனாளி ஒரு அவசர மருத்துவ உதவி என்னும் போது, செலவு அதிகம் ஆகி விடும் என்ற நோக்கில், அருகில் தனியார் மருத்துவமனை இருந்தாலும் கூட, எங்கோ ஒரு தூரத்தில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு கூட்டி செல்லப்படுகிறார். இதனால் சிகிச்சைக்கான காலம் நீட்டிக்கப்பட்டு உயிர் போகும் நிலை கூட வருகிறது, இந்த நிலையில் இருந்து காத்துக் கொள்ள தான், ஏழை எளிய மக்களுக்கு ரூ 5 இலட்சம் மருத்துவ காப்பீடு வழங்கும் வகையில் ஆயுஷ்மான் பாரத் கார்டு வழங்கப்படுகிறது.
இந்த கார்டின் மூலம் ஏழை எளிய மக்கள் தனியார் மருத்துவமனையிலும் கூட அவசர சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள முடியும், இத்திட்டத்தின் 1,354 மருத்துவ செயல்முறைகளும், சிகிச்சைகளும் பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன, தேசம் முழுக்க 17,000 மருத்துவமனைகள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன, தமிழகத்தில் கிட்டதட்ட தோராயமாக 780 மருத்துவமனைகள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டு இருக்கின்றன.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைவது எப்படி?
1) ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இணைய அரசால் அறிமுகப்படுத்த செயலி மூலமாகவும் இணையலாம்.
2) https://abha.abdm.gov.in/abha/v3/register என்ற இணையதளத்திலும் புதிய கார்டுக்கு விண்ணபிக்கலாம்.
3) ஆதார் மற்றும் ஆதாரில் உள்ளிட்ட மொபைல் எண் அவசியம்.
4) குடும்ப அட்டையில் உங்கள் பெயர் இருப்பதும் அவசியம்
5) தகவல்களை எல்லாம் உள்ளிட்டு உங்கள் ஆவணங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் ஆன்லைனிலேயே உங்களது ஆயுஷ்மான் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
" ஏழை எளிய மக்களுக்கு தீடீர் என்று வருகின்ற ஏதாவது ஒரு நோயால் அவர்களது பொருளாதாரம் என்பது இன்னும் பின்னடைவை சந்திக்கிறது, அத்தகைய நிலையில் இருந்து அவர்களை மீட்கும் பொருட்டு இத்திட்டம் சிறந்ததொரு திட்டமாக பார்க்கப்படுகிறது "