• India
```

70 வயது மேற்பட்டவர்களுக்கும் இலவச மருத்துவ காப்பீடு..இன்று முதல் துவக்கம்..!

Ayushman Bharat For Age 70 And Above

By Ramesh

Published on:  2024-10-29 06:20:18  |    371

Ayushman Bharat For Age 70 And Above - 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களும் இலவச காப்பீடு வழங்கும் திட்டத்தை இன்று முதல் ஒன்றிய அரசு துவங்கி வைக்கிறது.

Ayushman Bharat For Age 70 And Above -ஆயுஷ்மான் பாரத் திட்டம் என்பது 70 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு ரூ 5 இலட்சம் வரை மருத்துவ இலவச காப்பீடு வழங்கும் ஒரு காப்பீட்டு திட்டம் ஆகும், கடந்த செப்டம்பரில் ஆயுஷ்மான் பாரத் விரிவாக்கம் செய்யப்பட்டு 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டது, இன்று முதல் அந்த மாற்று வடிவமைப்பாக்கம் ஒன்றிய அரசால் அமல்படுத்தப்படவும் இருக்கிறது.

இத்திட்டத்தின் கீழ் கிட்டதட்ட 6 கோடி பேர் பயன்பெற வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது, அரசு வேலைகளில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்களும் கூட இத்திட்டத்தின் கீழ் பயன்பட முடியும், 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் இத்திட்டத்தில் இணைய வயது வரம்பு, வருமானம் உள்ளிட்டவைகள் எல்லாம் அடிப்படையாக வைக்கப்படவில்லை என கூறப்படுகிறது, இருந்தாலும் வயதை குறிப்பிடப்பட்டு இருக்கும் ஏதாவது சான்றிதழ்கள் அவசியம்.


இத்திட்டத்தின் கீழ் எப்படி பதிவு செய்வது?

இத்திட்டத்தின் கீழ் இணைய வயது, மொபைல் நம்பருடன் கூடிய ஆதார் கையில் இருப்பது அவசியம், அரசின் அதிகாரப்பூர்வ ஆயுஷ்மான் செயலி அல்லது ஆயுஷ்மான் பாரத் இணையதளத்தில் பதிவு செய்யலாம், ஆயுஷ்மான் அட்டைக்கான முகாம்களும் அவ்வப்போது நடத்தப்படுகிறது, அத்தகைய முகாம்களிலும் பதிவு செய்து கொள்ளலாம்.

எத்தனை மருத்துவமனைகள் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் இருக்கிறது?

கிட்டதட்ட நாடு முழுவதும் இருக்கும் 30,654 மருத்துவமனைகளில் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் மருத்துவம் பெற முடியும், இதில் 17,078 பொதுத்துறை மருத்துவமனைகளும், 13,576 தனியார் மருத்துவமனைகளும் அடங்கும், உங்கள் நகரத்திற்கு அருகில் இருக்கும் மருத்துவமனையை அறிய https://hospitals.pmjay.gov.in/Search/empnlWorkFlow.htm?actionFlag=ViewRegisteredHosptlsNew இந்த லிங்கிற்கும் சென்று மாநிலம், மாவட்டத்தை கொடுக்கும் பட்சத்தில் ஆயுஷ்மான் அட்டை மூலம் சிகிச்சை பெறக்கூடிய மருத்துவமனைகளை அறியமுடியும்.

Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola