பூமியில் புயல்கள் பேரழிவுகளை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டவை. இதுவரை பதிவான மிக அதிக வேக புயல் மணிக்கு 407 கி.மீ வேகத்தில் வீசியதாக அறியப்பட்டுள்ளது.
பூமியில் புயல்கள் பேரழிவுகளை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டவை. இதுவரை பதிவான மிக அதிக வேக புயல் மணிக்கு 407 கி.மீ வேகத்தில் வீசியதாக அறியப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வானியலாளர்கள் மணிக்கு 33,000 கி.மீ வேகத்தில் வீசும் சூறாவளி காற்றை ஒரு புறக்கோளில் கண்டறிந்துள்ளனர். இது புவியியல் அளவில் வியக்கத்தக்க ஒன்றாகும்.
பூமியிலிருந்து 500 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் WASP-127b என்ற ஒரு பெரிய வாயுப் புறக்கோள் இந்த அதிவேக சூறாவளியின் நிலையமாக பார்க்கப்படுகிறது. வியாழன் கிரகத்தை விட சற்று பெரியதாகக் கருதப்படும் இந்த கிரகம், மிகவும் குறைந்த அடர்த்தி கொண்டதாகும். 2016-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இதன் பூமத்திய ரேகையில் மிகவும் வலுவான சூறாவளி காற்று வீசும் ஒரு பெரிய வளையம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது, நமது சூரிய குடும்பத்தில் உள்ள வாயு கிரகங்களின் வெளிப்புற வளையங்களைப் போலவே தோற்றமளிக்கிறது. இந்த அதிவேக காற்று இயக்கங்கள் அக் கிரகத்தில் எந்தவிதமான வானிலை மாறுதல்களை உருவாக்கும் என்பதை வானியலாளர்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.