Perungayam Health Benefits Tamil - சமையலில் அன்றாடம் நாம் பயன்படுத்துகிற பெருங்காயத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பொதுவாக பெருங்காயம் என்பது சமையலில் சுவையூட்டுவதற்காக பயன்படுத்தப்படும் ஒரு காரணி, இது உணவிற்கு நறுமணத்தையும் தனித்துவமான சுவையையும் வழங்குகிறது, இது உணவில் சேர்க்கப்படும் சுவைக்கான காரணியாக மட்டும் அல்லாமல் ஆயுர்வேதம் மற்றும் சித்தாக்களில் ஒரு சில மருந்துகளாகவும் அந்த காலக்கட்டத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
பொதுவாக பெருங்காயம் செரிமான நொதிகளின் உற்பத்தியைத் தூண்டுவதால், பெருங்காயத்தை உணவுகளில் சேர்த்து பயன்படுத்தும் போது அது செரிமானத்தை நன்கு மேம்படுத்துகிறது, இது உணவை உடைத்து செரிமானத்தை எளிதாக்குகிறது. நீண்ட நாள் வாய்வு பிரச்சினைகளில் இருந்து விடுபடவும் பெருங்காயம் ஆனது பெருமளவில் உதவுகிறது.
ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளில் ஏற்படும் சுவாச பிரச்சனைகளை போக்குகிறது, பெருங்காயத்தில் உள்ள ஆன்டி-வைரல் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் சளி, இருமல் போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபடவும் பெருமளவில் உதவிகிறது, வெந்தயத்தை நனைய வைத்து அதில் பெருங்காய பொடி சேர்த்து குடித்தால் அது மாதவிடாய் வலியை குறைக்கிறது.
நீண்ட நேரம் ஒரே இடத்தில் இருக்கும் போதோ அல்லது நீண்ட நேரம் ஒரே வேலையை செய்பவர்களோ பெருங்காயத்தை அடிக்கடி உணவுகளில் சேர்த்து வந்தால் அவர்களுக்கு அடிக்கடி ஏற்படும் தசைப்பிடிப்புகளை தவிர்க்கலாம், பெருங்காயம் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இது இரத்த நாளங்களை விரிவுபடுத்தி இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
" பெருங்காயத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் தடுக்க உதவுகின்றன. மொத்தத்தில் பெருங்காயம் ஆயுர்வேத மருத்துவத்தின் ஒரு ஆகச்சிறந்த கண்டு பிடிப்பு என்றே சொல்லலாம் "