• India
```

RRB Group D விண்ணப்பத்திற்கு...பதிவு செய்வதற்கான...கால அவகாசம் நீட்டிப்பு...!

Deadline for RRB Group D Applications Extended

By Ramesh

Published on:  2025-02-20 13:49:55  |    26

Deadline for RRB Group D Applications Extended - ரயில்வே துறையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் RRB Group D விண்ணப்பத்திற்கு பதிவு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே துறையில் குரூப் D பதவிகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது ஆன்லைனில் வரவேற்கப்பட்டு கொண்டு இருக்கின்றன, டிராக் மெயிண்டனட், பாயிண்ட்ஸ் மேன், ஹெல்பர் என பல துறைகளில் 32,438 பதவிகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன, RRB Chennai தளத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் இந்த பதவிகளுக்கான தேர்வுகளுக்கு அதிகாரப்பூர்வமாக பதிவு செய்ய முடியும்.

முதலில் ரயில்வே குரூப் D விண்ணப்பங்களுக்கான கடைசி தேதி பிப்ரவரி 22 வரை மட்டுமே அறிவிக்கப்பட்டு இருந்தது, போட்டி தேர்வர்கள் பலருக்கும் பதிவு செய்யும் போது இணையதளத்தில் பல்வேறு கோளாறுகள் ஏற்பட்டதால் பலரும் தேதியை நீட்டிக்க சொல்லி கேட்டு வந்தனர், பொதுவாக குரூப் D க்கு பதிவு செய்யும் போது மூன்று வித OTP கள் வரும்.



ஈமெயிலுக்கு ஒன்று, மொபைல் நம்பருக்கு ஒன்று, ஆதாரை சரிபார்க்கும் பொருட்டு ஒன்று என மூன்று வித OTP கள் வரும், இதில் ஒன்று வந்தால் ஒன்று வராது, இன்னொன்று வந்தால் இன்னொன்று வராது, எல்லாம் வந்தால் Captacha சரி பார்ப்பில் பிரச்சினை, என ஒரு விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கு விண்ணப்பதாரர்களுக்கு போதும் போதும் என ஆகி விடுகிறதாம்.

பல தேர்வர்களும் விண்ணப்பங்களை எளிமையாக்கவும், கால அவகாசத்தை நீட்டிக்கவும் இணையதளங்களிலும் சமூக வலைதளங்களிலும் புலம்பி வந்த நிலையில் ஒரு வழியாக ரயில்வே தேர்வு துறை கால அவகாசத்திற்கு ஒப்புதல் அளித்து, பிப்ரவரி 22, 2025 ஆக இருந்த விண்ணப்பத்திற்கான கடைசி தேதியை, மார்ச் 1, 2025 ஆக அறிவித்து இருக்கிறது.

Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola