Amanakku Benefits In Tamil - சாதாரணமாக சாலைகளில் வளர்ந்து கிடக்கும் ஆமணக்கில் இருக்கும் மருத்துவ பயன்கள் குறித்து இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.
பொதுவாக ஆமணக்கு என்பது சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவங்களில் ஆகச்சிறந்த மூலிகை செடியாக பார்க்கப்படுகிறது, இதன் இலை முதல் வேர் வரை அனைத்தும் பல்வேறு மருத்துவ பயன்களை உள்ளடக்கியதாக இருக்கிறது, இந்த ஆமணக்கில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் என்பதும் பல்வேறு மூலிகை மருத்துவங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆமணக்கு எண்ணெயை தேனோடு சேர்த்து நாவின் அடிப்பகுதியில் வைத்து எடுத்துக் கொள்ளும் போது இது குடல் இயக்கத்தை அதிகப்படுத்தி உடலியியக்கங்களின் செரிமானத் தன்மையை அதிகரிக்கிறது, இந்த ஆமணக்கு எண்ணெயை முகத்தில் தினமும் தடவி மசாஜ் செய்து வந்தால் வறண்ட சருமம், அரிப்பு, மற்றும் தோல் அழற்சி போன்ற பிரச்சினைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.
மேலும், இது முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை குறைக்கவும் உதவுகிறது, ஆமணக்கு எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது மூட்டு வலி, வீக்கம் மற்றும் வாத நோயின் அறிகுறிகளை வெகுவாக குறைக்க உதவுகிறது, ஆமணக்கு எண்ணெய் முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. இது முடி உதிர்வை குறைத்து, முடியை வலுவாக்குகிறது. மேலும், இது பொடுகுத் தொல்லையையும் நீக்குகிறது.
ஆமணக்கு எண்ணெய் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகிறது, ஆமணக்கு எண்ணெயில் காயம் ஆற்றும் பண்புகள் உள்ளன. இது சிறு காயங்கள், வெட்டுக்கள் மற்றும் தீக்காயங்களின் மீது தேய்க்கும் போது காயங்களை சீக்கிரம் வாடச் செய்து ஆற்றுகின்றன.
" மொத்தமாக ஆமணக்கு என்பது ஒரு ஆகச்சிறந்த மருத்துவ மூலிகைச்செடி, இதில் இருக்கும் ரிசினோலிக் அமிலம் என்ற சிறப்பான வேதிப்பொருட்கள் தான் இதன் மருத்துவ பயன்களுக்கு காரணம் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர் "