Aadhar Card News Update - ஆதார் அட்டையை வருகின்ற செப்டம்பர் 14க்குள் புதுப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை ஆன்லைனில் எப்படி புதுப்பிக்கலாம்..
Aadhar Card News Update - பா.ஜ.க. அரசு ஆட்சியில் இருக்கும் பொழுது ஆதார் அட்டை இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டது. இன்று, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் ஆதார் அட்டையைப் பெற்று அதனைப் பயன்படுத்தியுள்ளார்கள்.
அடிப்படை தகவல்களான செல்போன் எண், புகைப்படம் மாற்ற விருபப்படுவோருக்கு,செப்டம்பர் 14ஆம் வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.மேலும்,10 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட ஆதார் அட்டைகளை புதுப்பிக்காதவர்கள், அடையாளச் சான்றிதழ்கள் மற்றும் முகவரி சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டம் என்று கூறப்பட்டுள்ளது.
ஆதார் அட்டையை ஆன்லைனில் எப்படி அப்டேட் செய்யலாம் ?
1. UIDAI இணையதளத்தில் சென்று,ஆதார் அட்டை எண் மற்றும் OTP பயன்படுத்தி உள்நுழையவும்.
2. அடையாளம் மற்றும் முகவரியை உறுதிப்படுத்தி, தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்.
3.ஒப்புதலை கொடுக்கவும்.
பிறகு,ஆதார் தளத்தில் மேற்கண்ட தகவல்களை புதுப்பிக்கலாம், ஆனால் கருவிழி ஸ்கேன், கைரேகைகள், மற்றும் முக புகைப்படங்கள் போன்ற முக்கிய விவரங்களை இணையதளத்தின் வழி மூலமாக புதுப்பிக்க முடியாது.
புகைப்படத்தை ஆதார் அட்டையில் மாற்றுவது எப்படி?
1.UIDAI இணையதளத்தில் பூர்த்தி செய்த படிவத்துடன், அருகிலுள்ள ஆதார் சேவை மையத்திற்கு நேரில் சென்று, உங்கள் புகைப்படத்தை புதுப்பிக்கலாம்.
2.புதுப்பிப்பு கோரிக்கை எண்ணை பயன்படுத்தி,உங்கள் ஆதார் அட்டை அப்டேட் நிலவரத்தை சரிபார்க்கலாம்.
மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் பல்வேறு சேவைகளைப் பெறவும், வங்கிக் கணக்குகளை தொடங்கவும் ஆதார் அட்டை மிகவும் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2