Aadhaar Name Change Tricks - ஆதாரில் பெயர் மாற்றம் செய்யும் போது அப்ளிகேசன் ரிஜக்ட் ஆகிட்டே இருந்தா இத பண்ணுங்க உடனே பெயர் மாற்றம் செய்யப்பட்டு விடும்.
Aadhaar Name Change Tricks - பெரும்பாலும் பலரும் ஆதார் பெயர் மாற்றத்தின் போது புலம்பும் ஒரு விடயம் என்ன டாகுமெண்ட் கொடுத்தாலும் பெயர் மாற்ற முடியல, எத்தன தடவ அப்ளை பண்ணாலும் அப்ளிகேசன் ரிஜக்ட் ஆகிடுது என்பது தான், பொதுவாக ஒருவர் தனது வாழ்நாளில் இரு முறை மட்டுமே ஆதாரில் பெயர் மாற்றம் செய்ய முடியும், அதற்கு மேல் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை.
பலருக்கும் முதலில் ஆதார் அவர்களுடைய அப்பாவின் பெயரோடு சேர்ந்து இருக்கும், ஆனால் பல முக்கிய ஆவணங்களில் பெயர் அவ்வாறு இருப்பதில்லை, தற்போது ஆதார் ஒரு முக்கிய ஆவணமாக மாறி விட்டதால், நம்மிடம் இருக்கும் மற்ற ஆவணங்களின் பெயரோடு ஆதாரில் இருக்கும் பெயரும் ஒத்து போவது அவசியம் ஆகிறது, அந்த வகையில் ஆதாரில் பெயரை எளிதாக மாற்றுவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
சரி, ஆதாரில் ரிஜக்டே ஆகாம உடனே பெயர் மாத்தனுமா, அப்படின்னா இத பண்ணுங்க
1) முதலில் அருகில் இருக்கும் ஒரு ஈ சேவை மையத்திற்கு செல்லுங்கள், கையில் உங்களது பெயர், முகவரி எந்த ஆவணத்தில் சரியாக இருக்கிறதோ அந்த ஆவணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்,
2) ஸ்மார்ட் கார்டு, சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம், மொபைல் உள்ளிட்டவைகள் எடுத்துச் செல்ல வேண்டும்,
3) அங்கு சென்று விட்டு உங்களுக்கு Residence Certificate பதிவு செய்ய வேண்டும் என்று கூறுங்கள், ஒரு 5 நிமிடத்தில் பதிவு செய்து கொடுத்தி விடுவார்,
4) இரண்டு முதல் மூன்று நாட்களுக்குள் உங்களுக்கு இருப்பிட சான்றிதழ் எனப்படும் Residence Certificate உங்களது போட்டோ மற்றும் முகவரியுடன் கையில் கிடைத்து விடும்,
5) பின்னர் ஆதார் மையத்திற்கு சென்று அந்த இருப்பிடச்சான்றிதழை ஆவணமாக வைத்து பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பியுங்கள்,
6) 3 நாட்கள் முதல் 1 வாரத்திற்குள் உங்களது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு பெயரும் மாற்றம் செய்யப்படும்.
" அடிக்கடி பெயர் மாற்றத்திற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் இதை செய்யுங்கள், உடனடியாக உங்கள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படு, பெயர் உடனடியாக மாற்றம் செய்யப்படும் "