Aadhaar Address Change Without Any Proof - ஆதார் ஐடியில் முகவரிக்கான எந்த ஒரு Proof யும் இல்லாமல் முகவரி எப்படி மாற்றுவது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Aadhaar Address Change Without Any Proof - பொதுவாக ஆதார் என்பது இந்தியர்களின் ஒரு முக்கிய ஆவணமாக விளங்கி வருகிறது, தற்போதெல்லாம் அனைத்திற்கும் ஆதார் என்ற நிலை ஆகி விட்டது, மத்திய அரசின் எந்த ஒரு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தாலும் ஆதார் அவசியமாகிறது, மத்திய அரசு மட்டும் அல்லாது மாநில அரசுகளும் தற்போது ஒவ்வொரு ஸ்கீம்களுக்கும் ஆதாரை கட்டாயப்படுத்தி வருகிறது.
வங்கியில் கணக்கு துவங்குவது, வேலைக்கு பதிவு செய்வது, முக்கிய திட்டங்களில் இணைவது, கடன் பெறுவது, தங்க நகை அடமானம், தங்க நகை விற்பனை, தொழில் துவக்கம், இன்ஸூரன்ஸ், கார் பதிவு, கார் எடுத்தல், பைக் எடுத்தல், ரிஜிஸ்ட்ரேசன் என ஆதார் அவசியம் ஆகாத துறையை கண்டி பிடிப்பது என்பது மிக மிக அரிது, அந்த அளவிற்கு ஆதார் மிக முக்கியமாக ஆவணமாக இருந்து வருகிறது.
சரி, ஆதாரில் முகவரிக்கு ஏதும் Proof இல்லாமல் முகவரி மாற்றுவது எப்படி?
வீடு மாறி இருக்கலாம், வேறு இடத்தில் வீடு கட்டி இருக்கலாம், பணி மாறுதல் காரணமாக மாறிக் கொண்டே இருக்கும் சூழல் இவ்வாறானவர்களுக்கு ஆதாரில் முகவரி மாற்றுவது என்பது சற்று சிரமம் ஆக இருக்கும், அவர்களுக்கு முகவரிக்கு சரியான Proof என்பது இருக்காது, அந்த வகையில் எவ்வாறு முகவரி மாற்றலாம் என்பதற்கு ஒரு சில வழிமுறைகள் இருக்கின்றன.
Address Update Form: https://www.tndsc.co.in/downloads/2.pdf
முதலாவதாக மேல் இருக்கும் லிங்கை க்ளிக் செய்து ஆதார் அப்டேட் பார்மை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும், அதை முழுவதும் நிரப்பி, நீங்கள் தற்போது இருக்கும் முகவரியை உள்ளிட்டு உங்கள் போட்டோ ஒன்றை ஒட்டி, உங்களுக்கு தெரிந்த வக்கீலோ, ஏதேனும் அரசு அதிகாரியோ அல்லது நீங்கள் படித்த பள்ளி கல்லூரி முதல்வரிடமோ சீல் உடன் சான்றொப்பம் வாங்கிக் கொள்ள வேண்டும்.
" சீலும் கையொப்பமும் இரண்டு இடத்தில் இருக்க வேண்டும், ஒன்று உங்கள் போட்டோவின் மேல், பின்னர் சீல் மற்றும் கையொப்பத்திற்குரிய கட்டம், பின்னர் அந்த பார்மை நீங்கள் அதிகாரப்பூர்வமாக முகவரி மாற்றுவதற்கு Proof ஆக பயன்படுத்திக் கொள்ளலாம் "