Wrong UPI Transaction- யுபிஐ பயனாளர்கள் தவறாக பணம் செலுத்தினால் அதனை திரும்பப் பெறுவது தொடர்பான ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) வழிகாட்டுதல் கொடுத்திருக்கிறது அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
Wrong UPI Transaction -நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் டிஜிட்டல் காலத்தில் தற்பொழுது நாம் மற்றோருவருக்கு பணம் அனுப்புவதற்கு எந்த வங்கிகளுக்கும் செல்ல வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.ஏன் என்றால் நாம் வீட்டில் இருந்தபடியே நமது கைபேசியின் வழியே பணத்தை அனுப்பிக் கொள்ளலாம். அதாவது, கூகுள் பே, பேடிஎம், போன்பே (Google Pay, Paytm, PhonePay) போன்றவற்றை பயன்படுத்தி எளிமையான முறையில் பணம் அனுப்பி கொள்ளலாம்.
இந்த டிஜிட்டல் வாழ்க்கையில் மக்கள் ஒரு பொருள் வாங்குவதாக இருக்கட்டும் அல்லது பணம் செலவு செய்வதற்கு முன்பு போல் யாரும் கையில் எடுத்துச் செல்வதில்லை.டீக்கடை முதல் துணிக்கடை வரை எங்கு சென்றாலும் UPI மூலம் தான் பணம் செலுத்துகின்றனர். இந்நிலையில், யுபிஐ பயனாளர்கள் தவறாக பணம் செலுத்தினால் அதனை திரும்பப் பெறுவது தொடர்பான ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) வழிகாட்டுதல் கொடுத்திருக்கிறது அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
Today Business News In Tamil- ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல், யுபிஐ மூலம் நீங்கள் தவறுதலாக பணம் அனுப்பியிருந்தால், பணம் பெற்றவரை தொடர்பு கொண்டு விவரத்தை சொல்லலாம்.அல்லது அவரிடம் பேசி பணம் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
நீங்கள் தவறுதலாக பணம் அனுப்பிய யுபிஐ செயலியின் கஸ்ட்மர் சப்போர்டை (Customer support) தொடர்பு கொண்டு நடந்தவற்றை சொல்லலாம். இதில், ரீஃபண்ட் (Refund) சார்ந்த தகவல்களை பயனர்கள் தர வேண்டியது அவசியமானதாகும்.
யுபிஐ செயலியின் கஸ்ட்மர் சப்போர்ட் மூலம் தீர்வு காண முடியாத பட்சத்தில் நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவை (National Payments Corporation of India) தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
தவறுதலாக அனுப்பிய பயனர் தங்களுக்கு சம்மந்தமான வங்கியை தொடர்பு கொண்டு உதவி கோரலாம்.
தவறான யுபிஐ பரிவர்த்தனை குறித்து 1800-120-1740 என்ற டோல் ப்ரீ எண்ணை (toll free number) அழைத்து விவரத்தை சொல்லலாம்.
தவறான QR code-யை Scan செய்து பணம் அனுப்பிருந்தால் சம்பந்தப்பட்ட யுபிஐ செயலியின் கஸ்ட்மர் சப்போர்டை தொடர்பு கொள்ள வேண்டும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2