Tips To Become A Millionaire -இளம் வயதில் பெரும்பாலானோர் சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வைத்து கோடீஸ்வரராக ஆக விரும்புகிறார்கள். என்னென்ன வழிகளில் பணத்தை சேமித்து வைத்து கோடிஸ்வரர் ஆகலாம் என்று பார்க்கலாம்.
Tips To Become A Millionaire -இளம் வயதில் கோடீஸ்வரராக ஆக விரும்பினால், முதலில் நிதி திட்டமிடல், வருமானத்தை அதிகரித்தல், இலக்குகளை நிர்ணயித்தல், முதலீடு தொடங்குதல் மற்றும் பன்முக முதலீடு போன்ற விஷயங்களை கவனத்தில் கொள்வது மிகவும் அவசியமானது. இவை உங்கள் செல்வத்தை விரைவாகவும், பாதுகாப்பாகவும் உருவாக்க உதவியாக இருக்கும்.
1. முறையான நிதி திட்டம்:
உங்கள் வேலைக்கு சேர்ந்து முதல் ஊதியம் பெறத் தொடங்கிய நாளிலிருந்து ஒரு நிதி திட்டத்தை உருவாக்குங்கள். உங்கள் வருமானம், செலவுகள் (வாடகை, போக்குவரத்து, மளிகை சாமான்கள்) ஆகியவற்றை கணக்கில் எடுத்து, தேவையற்ற செலவுகளை குறைத்து, முதலீட்டுக்கும் சேமிப்பிற்கும் ஒரு முறை வகையிலான திட்டத்தை உருவாக்குங்கள். இதனால் நீங்கள் சிறந்த நிதி ஒழுக்கத்தை உருவாக்கலாம்.
2. வருமானத்தை அதிகரிக்க:
உங்கள் வருமானம் குறைவாக இருப்பதாக உணர்ந்தால், அதை அதிகரிக்க என்ன செய்யலாம் என்பதை சிந்தியுங்கள். செலவுகளை கண்காணிக்க பல செயலிகள் தற்போது கிடைக்கின்றன. அதன்படி முதலீட்டு முடிவுகளை நன்கு திட்டமிடுங்கள், இது உங்கள் வருமானத்தை அதிகரிக்க உதவியாக இருக்கும்.
3. வாழ்க்கை இலக்குகள்:
சேமிப்புகளுக்கு இலக்குகள் அமைக்கவும். உதாரணமாக, “அடுத்த ஐந்து ஆண்டுகளில் நான் இவ்வளவு தொகையை சேமிக்க வேண்டும்” என்பதேற்கான இலக்குகளை நிர்ணயியுங்கள். வீட்டொன்றை வாங்க, வாகனத்தை வாங்க, திருமணத்திற்கு பணம் சேமிக்க, தொழிலாக தொடங்க, ஓய்வுக்கு சேமிக்க ஆகிய குறிக்கோள்களை வைத்து, அந்த நோக்கங்களுக்கேற்ற வகையில் முதலீடு செய்து உங்கள் நிதி ஒழுக்கத்தை மேம்படுத்தலாம்.
4. சிறுவயதிலேயே முதலீடு செய்ய வேண்டும்:
சிறுவயது முதலே முதலீடு செய்யத் தொடங்குவது உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அதாவது, மாதம் ரூ.20,000 எஸ்ஐபி முறையில் 15% வருடாந்திர வட்டி அளவோடு முதலீடு செய்தால், 13 ஆண்டுகளில் ரூ.1 கோடி தொகையை பெற முடியும்.
5. பன்முக முதலீடு:
ஒரே வகை முதலீடுகளுக்கு மட்டுமே சார்ந்துவிடாமல், முதலீடுகளை பல்வேறு வகைகளில் பரவலாக வினியோகிக்கவும். இதனால், ஒரு முதலீடு சரிவடைந்தாலும், மற்றவை அதனை ஈடுகட்டும் வகையில் லாபத்தை கொடுக்கும் என்று முதலீட்டு துறை நிபுணர்கள் கூறுகிறார்கள்.
6. இன்சூரன்ஸ்:
நீங்கள் இளம் வயதில் செல்வத்தை சேர்க்க முடிவு செய்ய வேண்டும் என்று நினைப்பவராக இருந்தால், முதலில் டெர்ம் இன்சூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் போன்றவை அவசியம் என்பதை நினைவில் வைத்து கொள்ளவும்.மேலும், இது உங்கள் எதிர்காலத்தில் பாதுகாப்புக்கு உதவும்.