• India
```

TNPDS இணையதளத்தில்..ஸ்மார்ட் கார்டு திருத்தம்..அதற்கான வழிமுறைகள் இதோ..!

 Ration Card Update Tamil Nadu | New Ration Card Apply Online Tamil

Ration Card Update Tamil Nadu -ஸ்மார்ட் கார்டில் உங்கள் விவரங்களை சரியாகத் திருத்த, அதிகாரப்பூர்வ TNPDS இணையதளம் வழிமுறை வழங்குகிறது.காய் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

 Ration Card Update Tamil Nadu -ஸ்மார்ட் கார்டில் உள்ள பிழைகளை சரி செய்வது,தற்போது நியாய விலைக் கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு ஸ்மார்ட் கார்டுகளைப் பயன்படுத்துவது சாதாரணமாக மாறிவிட்டது. இந்நிலையில், தமிழக அரசு எண்ணெய், அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை மானிய விலையில் வழங்கி வருகிறது. இதற்கு நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட் கார்டில் உள்ள விவரங்கள் சரியானதாக இருக்க வேண்டும். தவறுகள் ஏதும் இருப்பின், அதை ஆன்லைனில் சரிசெய்து கொள்ளலாம். இப்போது, உங்கள் ஸ்மார்ட் கார்டில் உள்ள எந்தவொரு பிழையையும் எவ்வாறு சரி செய்வது என்பதைப் பற்றி பார்ப்போம்.

அரசாங்க ஆவணங்கள், உதாரணமாக ஆதார் கார்டு, போன்றவை அனைத்திலும் உங்கள் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். தற்போது, ஆதார் கார்டில் தேவையான திருத்தங்களைச் செய்ய செப்டம்பர் 14-ஆம் தேதி வரை இலவசமாக காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அரசாங்க ஆவணங்களில் உங்கள் விவரங்கள் துல்லியமாக இருப்பது உறுதி செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டுகள் வெள்ளை, பச்சை, காக்கி போன்ற நிறங்களில் கிடைக்கின்றன. ஒவ்வொரு கார்டும், மாறுபட்ட குழுக்களுக்கு தனியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, காக்கி நிற ஸ்மார்ட் கார்டுகள் காவல்துறையினருக்கு வழங்கப்படுகிறது. இதுபோல, உங்கள் ஸ்மார்ட் கார்டில் உள்ள விவரங்கள் துல்லியமாக இருக்கிறதா என்பதை சரி பார்க்க வேண்டும்.


ஸ்மார்ட் ரேஷன் கார்டில் திருத்தங்களை செய்ய வழிமுறைகள்,

1. முதலில், அதிகாரப்பூர்வ TNPDS இணையதளத்தைப் திறக்கவும்.

2. "Beneficiary" பட்டனை கிளிக் செய்யவும்.

3. உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடுங்கள், பின்னர் "Request an OTP" என்பதை கிளிக் செய்யவும்.

4. உங்கள் மொபைல் நம்பருக்கு அனுப்பப்பட்ட OTP-ஐ உள்ளிடவும்.

5. உங்கள் சுயவிவரம் திறக்கப்படும். அதில் "Smart Card details" என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

6. தேவையான விவரங்களை திருத்துங்கள்.

7. "Approval button"-ஐ கிளிக் செய்யவும் மற்றும் புதிய PDF-ஐ சேமிக்கவும்.

எனவே,இந்நிலையை பின்தொடர்ந்து தவறுகளை சரி செய்து கொள்ளலாம்.


Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola