• India
```

தன்னையே விற்று ஆண்டுக்கு ரூ 69 லட்சம் சம்பாரிக்கும் நபர்!! இந்த ஐடியா புதுசா இருக்கே..

[Japanese man earned $80000 a year without doing any work]

By Dhiviyaraj

Published on:  2025-01-13 12:15:50  |    55

ஜப்பானை சேர்ந்த இளைஞர் தன்னையே விற்று, ஆண்டுக்கு ரூ. 68 லட்சம் சம்பாதிக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இதுகுறித்தான சுவாரஸ்யமான தகவலை தற்போது பார்க்கலாம்.

ஜப்பானை சேர்ந்தவர் ஷோஜி மோரிட்டோ என்ற 41 வயதான இவர் வேலை எதுவும் செய்யாமல் சும்மா இருந்து கொண்டிருக்கிறார். டோக்கியோவில் வசித்து வரும் இவர், தனிமையில் இருக்கும் நண்பர்களுக்கு துணையாக இருக்கிறார். இந்த விஷயத்தை 4 ஆண்டுகளாக செய்து வருவதாக கூறப்படுகிறது. 

தனிமையில் வாடும் நபர்கள் இவரை பணம் கொடுத்து வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். அவர்களுடன் பேசுவது, உணவு  அருந்துவது, சுற்றுள்ள செல்வது போன்ற விஷயங்களை செய்து வருகிறார். ஆனால் காதல் மற்றும் மற்ற மாதிரியான தொடர்பு ஆகியவற்றிற்கு ஷோஜி மோரிட்டோ இடம் கொடுப்பது கிடையாது.


இந்த வேலை மூலமாக ஆண்டுக்கு  80,000 அமெரிக்க டாலர்கள் சம்பாதிக்கிறார். இது இந்திய மதிப்பில் 69லட்சம் ஆகும். இந்த தொழில் தொடர்பாக பேசிய ஷோஜி மோரிட்டோ, "இந்த வேலையை செய்வதன் மூலம் அதிகம் சம்பாதித்தாலும்,  கொளுத்தும் வெயில், குளிரில் வரிசையில் பல மணிநேரம் நிற்பது எனப் பல  கஷ்டங்கள் இருக்கிறது என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.