Increasing CIBIL By Taking Gold Loan - பொதுவாக அனைவருக்குமே மனதுக்குள் ஒரு கேள்வி இருக்கும், கோல்டு லோனால் சிபில் ஸ்கோரில் ஏதும் மாற்றம் இருக்குமா என்று, அந்த கேள்விக்கான விடையை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Increasing CIBIL By Taking Gold Loan - முதலில்
கோல்டு லோன் என்பது கிட்டதட்ட ஒரு அடமான வகை லோன் போல தான், உங்கள் நகையை அடகு வைத்து உங்களுக்கு தேவையான பணத்தை பெறுகிறீர்கள், ஒவ்வொரு வங்கியும், ஒவ்வொரு நிதி நிறுவனங்களும் ஒரு கிராமிற்கான விலையை நிர்ணயித்து இருக்கும். மார்க்கெட்டில் தற்போது ஆபரணத் தங்கம் கிராம் 7000 ரூபாய் என்னும் போது, வங்கிகளில் கிராமிற்கு ரூபாய் 4500 முதல் 5700 ரூபாய் வரை அடமான கொள்முதல் விலை நிர்ணயிப்பார்கள். இந்த அடமான கொள்முதல் விலை வங்கிக்கு வங்கி மாறக்கூடியதாக இருக்கும்.
சரி, கோல்டு
லோன்
சிபில்
ஸ்கோரை
மாற்றக்
கூடியதா?
சிபில் ஸ்கோர் கம்மியாக இருக்கிறது, உயர்த்த வேண்டும், கோல்டு லோன் சிபில் ஸ்கோரை மாற்றக் கூடியதா என்றால் நிச்சயம் ஆம் என்றே சொல்லலாம், ஆனால் அதற்கு என்று உங்களுக்கு உள்ளாகவே ஒரு மூன்று விதிமுறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும்,
1) கோல்டு லோன் எடுக்கப்படும் போது நம்பத்தகுந்த நிதி நிறுவனங்களின் கீழ் எடுக்க வேண்டும்.
2)உங்களால் கட்ட முடிகின்ற தொகையை மட்டுமே எடுக்க வேண்டும்.
3)எடுத்து விட்டு குறிப்பிட்ட நாட்களுக்குள் திருப்பி விடும் மன நிலையிலும் நீங்கள் இருக்க வேண்டும்.
இந்த
மூன்று விதிமுறைகளை சரியாக உங்களால் பேண முடிகின்ற போது, உங்கள் சிபில் ஸ்கோரில் நல்ல பாசிட்டிவான மாற்றம் தெரியும். இவ்வாறாக அடிக்கடி நீங்கள் உங்கள் தங்கத்தை வைத்து சரியான நேரத்தில் திருப்பி விடும் போது, இந்த சிபில் ஸ்கோர் குறைவு என்ற பிரச்சினையில் இருந்து குறுகிய காலத்திற்குள் உங்களை விடுவித்துக் கொள்ள முடியும்.
சரி, கோல்டு
லோன்
மட்டும்
ஏன்
என்றால்!
கோல்டு லோன் மட்டுமே உங்களால் எளிதாக எடுக்க முடிகின்ற மற்றும் பாதுகாப்பான லோன்களில் ஒன்றாக கருதப்படுகிறது, எளிய முறையில் எடுக்க முடியும், மற்ற லோன்களை விட வட்டி மிக மிக குறைவு, மாத தவணை போல இல்லாமல் ஒரு வருடத்தில் எப்போது வேண்டுமானாலும் திருப்பி செலுத்திக் கொள்ளலாம். கோல்டு லோன்களில் திருப்பி செலுத்துவதில் ஒரு பிளக்ஸிபிலிட்டி இருக்கும்.