இந்தியாவில் பொது போக்குவரத்து மற்றும் தனியார் வாகனங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டாலும், ஆட்டோ வாகனங்களின் பிரபலமான பயன்பாடு குறைவதில்லை.
இந்தியாவில் பொது போக்குவரத்து மற்றும் தனியார் வாகனங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டாலும், ஆட்டோ வாகனங்களின் பிரபலமான பயன்பாடு குறைவதில்லை. ஆனால், கார்கள் போன்று ஆட்டோக்களுக்கு 4 சக்கரங்கள் இல்லாமல் 3 சக்கரங்கள் மட்டுமே இருக்கிறதேன் என்று உங்களுக்குத் தெரியுமா?
மூன்று சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களை விட தயாரிக்கவும், பராமரிக்கவும் குறைந்த செலவாகும். இதன் காரணமாக, ஆட்டோக்கள் மலிவான விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கின்றன.
மூன்று சக்கர வடிவமைப்பு, நெரிசலான தெருக்கள், சந்துகள், குறுகிய இடங்கள் போன்ற பகுதிகளில் எளிதாக இயங்க உதவுகிறது. பேருந்துகள் மற்றும் கார்கள் செல்ல முடியாத இடங்களிலும், ஆட்டோக்கள் வசதியாக சென்றுவிட முடியும்.
எரிபொருள் சேமிப்பு & அதிக மைலேஜ்: மிக குறைந்த எரிபொருள் பயன்படுத்தி, மற்ற வாகனங்களை விட மேலும் மைலேஜ் (mileage) பெற முடியும். இதன் மூலம் ஆட்டோ ஓட்டுநர்கள் குறைந்த செலவில் அதிக பயணிகளை சேவையளிக்க முடிகிறது.
எளிதாக வளைந்து செல்லும் & சுழலும் திறன் மூன்று சக்கர வடிவமைப்பு, வாகனத்தை எளிதாக திருப்பவும், சிறிய இடங்களில் வளைந்துச் செல்லவும் உதவுகிறது. இதனால், பெரும் வாகனங்களை விட ஆட்டோக்கள் சிரமமின்றி நகர முடிகிறது.