Water Melon Selling Ideas Tamil - தண்ணீர் பழம் விற்பனை செய்து எவ்வாறு ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் பார்ப்பது என்பது குறித்து பார்க்கலாம்.
அடிக்கும் வெயிலுக்கு மக்கள் உடலுக்கு இதமாய் ஏதாவது சாப்பிட வேண்டும் என நினைப்பார்கள், தண்ணீர், கரும்பு சாறு, ஜூஸ் வகைகள் என தெருவெங்கும் கடைகள் நிறைந்து இருப்பதை பார்க்கலாம், முக்கியமாக தண்ணீர் பழம் என்பது கோடை காலங்களில் மக்கள் விரும்பி தேடி உண்ணும் ஒரு பழ வகையாக இருக்கிறது, அந்த வகையில் தண்ணீர் பழத்திற்கு இந்த கோடையில் அதிக டிமாண்ட் தான்.
அந்த வகையில் உழவர் சந்தை, வேளாண் சந்தைகள் மூலம் தண்ணீர் பழ விவசாயிகளை நேரடியாக தொடர்பு தண்ணீர் பழங்களை மொத்த விலைக்கு கொள்முதல் செய்து கொள்ள வேண்டும், மொத்த விலைக்கு நீங்கள் தண்ணீர் பழங்களை கிலோ ரூ 15 முதல் 20 ரூபாய் வரை வாங்கலாம், விற்பனைக்கு கிலோ 30 ரூபாய் வரை விலை நிர்ணயித்து விற்கலாம்.
துண்டு துண்டாக நறுக்கி பழ ஊசிக்குச்சு போட்டு டம்ளரில் போட்டு விற்றால் ஒரு டம்ளரே ரூ 20 ரூபாய்க்கு விற்கலாம், இந்த இரண்டு விதமான விற்பனைகளுக்குமே ஒரு சாலையோர ஸ்டால் இருந்தால் போதும், பைபாஸ் சாலைகளில் அதிக வாகனங்கள் வந்து போகும் இடத்தில் ஸ்டால் அமைந்தால் இன்னும் சிறப்பு, நறுக்கி விற்கும் போது ஒவ்வொரு பழத்திற்கும் 6 மடங்கிற்கு மேல் இலாபம் இருக்கும்.
ஒரு நாளைக்கு 5 பழங்களை நறுக்கி விற்றும், ஒரு 5 பழங்களை மொத்தமாக விற்றாலும் கூட தினசரி ரூ 2000 வரை வருமானம் பார்க்கலாம், ஒரு வாகனம் இருந்தால் தெருக்கள் தெருக்களாக சுற்றி விற்றால் இன்னும் அதிக பழங்களை விற்பனை செய்ய முடியும், அதிக இலாபமும் பார்க்க முடியும், இது ஒரு சீசனல் தொழில் தான், ஆனாலும் கோடை முடிவதற்குள் உங்களை இலட்சாதிபதி ஆக்கி விடும்.