• India
```

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் காளான் Business!! வாங்க தெரிந்துகொள்ளலாம்..

mushroom business in tamil

By Dhiviyaraj

Published on:  2025-01-20 12:01:47  |    804

தேனி மாவட்டம், கம்பம் பகுதியைச் சேர்ந்த சிந்துஜா, கடந்த பத்து ஆண்டுகளாக காளான் வளர்ப்பில் ஈடுபட்டு, வெற்றிகரமாக விற்பனை செய்து வருகிறார்.

தேனி மாவட்டம், கம்பம் பகுதியைச் சேர்ந்த சிந்துஜா, கடந்த பத்து ஆண்டுகளாக காளான் வளர்ப்பில் ஈடுபட்டு, வெற்றிகரமாக விற்பனை செய்து வருகிறார். காளானுக்கு உள்ள அதிகமான தேவை காரணமாக, சிறிய அளவில் குடில் அமைத்து தனது பயணத்தை தொடங்கிய சிந்துஜா, இப்போது 20 சென்ட் பரப்பளவில் தொழிலை விரிவுபடுத்தியுள்ளார்.

தொடக்க காலத்தில் குறைந்த அளவில் காளான் உற்பத்தி செய்த அவர், வரDemand அதிகரித்ததை கருத்தில் கொண்டு, தொழில்நுட்பத்தை மேம்படுத்தி பல்வேறு வகையான காளான், குறிப்பாக ப்ளோரிடான், எச்.யு, பிங்க் போன்ற வகைகளை தயாரித்து விற்பனை செய்கிறார்.


காளான் உற்பத்தியை மட்டுமின்றி, அதிலிருந்து காளான் சூப் பவுடர், ரசப் பொடி, மசாலா பொடி, இட்லி-தோசை மாவு போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து வியாபாரம் செய்து வருகிறார். தினமும் 25-30 கிலோ வரை உற்பத்தி செய்யும் இவர், மொத்த விற்பனைக்கு ஒரு கிலோ காளானை ரூ.200க்குத் தருகிறார்.

பெண்கள் வீட்டு வாழ்க்கையுடன் சேர்ந்து தொழில்முனைவோராக முன்னேற விரும்பினால், குறைந்த முதலீட்டில் காளான் பண்ணை அமைத்து வெற்றி பெறலாம் என்று சிந்துஜா கூறுகிறார். தொழில்நுட்பத்தை முறையாக கற்றுக்கொண்டு, காளான் வளர்ப்பு தொழிலை தொடங்கினால், நல்ல லாபம் ஈட்ட முடியும் என அவர் அறிவுறுத்துகிறார்.

Business Ideas in Tamil Nadu
Small Business Ideas