• India
```

முருங்கை வளர்ப்பு...தோட்டம் மட்டும் இருந்தால் போதும்...மாதம் ரூ 20000 வரை வருமானம் பார்க்கலாம்...!

Drumstick Planting Ideas Tamil

By Ramesh

Published on:  2025-01-22 08:50:09  |    1173

Drumstick Planting Ideas Tamil - உங்கள் தோட்டத்தில் முருங்கை வளர்ப்பில் ஈடுபட்டு குறிப்பிடத்தக்க வருமானம் பார்ப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

Drumstick Planting Ideas Tamil - பொதுவாக முருங்கை என்பது சமையல் வகைகளில் தற்போது மிக மிக அத்தியாவசியம் ஆகி விட்டது, அதிலும் முருங்கையில் உடலுக்கு அத்திவாசியமான வைட்டமின்கள், இரும்புச்சத்துகள் உள்ளிட்டவைகள் மிகுந்து இருப்பதால் தற்போது முருங்கைக்கான டிமாண்ட் என்பது காய்கறி சந்தைகளில் வெகுவாக அதிகரித்து இருப்பதாக ஒரு தகவல் இருக்கிறது,

அந்த வகையில் முருங்கை வளர்ப்பதன் மூலம் எப்படி வருமானம் பார்க்க முடியும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம், உங்களிடம் தோட்டம் இருக்கும் பட்சத்தில் தாராளமாக அதில் முருங்கை பயிரிடலாம், உரத்திற்கு சாண உரம் பயன்படுத்தலாம், 15 நாட்களுக்கு ஒரு முறை இஞ்சி, மிளகாய், மிளகு கலந்த கலவையை தெளித்து விட்டால் பூச்சுகள் கட்டுப்பட்டு எப்போதும் முருங்கை காய்க்கும்,



முருங்கை என்பது எல்லா மாவட்டங்களிலும் ஒரே விலை இருப்பதில்லை, சராசரியாக கிலோ 100 ரூபாய் வரை கடைகளுக்கு கொடுக்கப்படுகிறது, முருங்கை கீரைகளையும் பறித்து கட்டுகளாக போட்டு சந்தைப்படுத்தலாம், தினசரி சராசரியாக ஒரு 5 கிலோ முருங்கையும், 5 கிலோ கீரையும் சந்தைப்படுத்தினால் கூட மாதத்திற்கு ரூ 20000 வரை வருமானம் பார்க்க முடியும்,

வீட்டை சுற்றி தோட்டம் அமைத்து வீட்டில் வெளியேறும் கழிவு நீரை பாத்தி கட்டி தோட்டத்திற்கு விட்டு, அவ்வப்போது இஞ்சி, மிளகு, மிளகாய் கரைசல் மட்டும் தெளித்து வந்தால் வருடம் முழுக்க வருமானத்தை அள்ளித்தரும் இந்த முருங்கை, நீங்கள் சரியாக பராமரித்தால் சீசனை தாண்டியும் முருங்கை மரம் முருங்கைகளை அள்ளித் தரும் என்பதில் ஐயமில்லை.

Business Ideas in Tamil Nadu
Small Business Ideas