• India
```

பருப்பு வகைகள் கடை...சரியாக முதலீடு செய்தால்...மாதம் ரூ 50000 வரை வருமானம் பார்க்கலாம்...!

 Wholesale Dal Shop Ideas

By Ramesh

Published on:  2025-01-29 09:58:19  |    923

Wholesale Dal Shop Ideas - மொத்த பருப்பு வகை கடை வைத்து எவ்வாறு ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் பார்ப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Wholesale Dal Shop Ideas - முதலில் பருப்பு வகைகள் கடைகள் வைப்பதற்கு சரியான இட தேர்வு என்பது அவசியம், நல்ல மார்க்கெட் பகுதிகளில் பலசரக்கு கடைகள் அதிகம் இருக்கும் பகுதிகளில் இருந்தால் இன்னும் நல்லது, மொத்த பருப்பு வகை கடை என்பது வீட்டிற்கு தேவையான அத்தியாவசியமான பருப்பு வகைகளை மொத்தமாகவும் சில்லறையாகவும் கொடுக்கும் ஒரு கடை அமைப்பு ஆகும்.

துவரம் பருப்பு, உளுந்தம்பருப்பு, உருட்டு உளுந்து, நவதானியங்கள் உள்ளிட்ட பருப்பு வகைகள், பயறு வகைகள் அனைத்தும் அந்த மொத்த பருப்பு வகை கடைகளில் இருப்பது அவசியம், பயறு மற்றும் பருப்பு வகைகளை மில்களில் நேரடியாக கொள்முதல் செய்து கொள்ளலாம், விவசாயிகளிடம் கொள்முதல் செய்தால் அதை பிரித்து எடுக்க வேண்டிய சூழல் இருக்கும்.



அந்த வகையில் மில்களில் கொள்முதல் செய்வதே சிறந்ததாக இருக்கும், 40 கிலோ மற்றும் 50 கிலோ மூடைகள் மில்களில் கிடைக்கும், ஒரு முறை நேரடியாக சென்று கொள்முதல் செய்து கொண்டு, அதற்கு பின் லாரி சர்வீஸ்களில் கூட போட்டு விடச்சொல்லலாம், மொத்தமாக ஒரு மூடைக்கு 30% வரை இலாபம் இருக்கும், இலாபத்தை ஒரு 5% குறைத்துக் கொண்டால் வாடிக்கையாளர்களை அதிகம் ஆக்கலாம்.

1 கிலோ, 1/2 கிலோ பாக்கெட்டுகள் போட்டு மொத்த கடைகளுக்கும், பலசரக்கு கடைகளுக்கும் கூட சந்தைப்படுத்தலாம், மூடைகளை பலசரக்கு கடைகளுக்கு மொத்த விலைக்கும் கொடுக்கலாம், ரீட்டைலுக்கு 25%, மொத்த கடைகளுக்கு 20% என இலாபங்களை பிரித்து வைத்துக் கொள்ளலாம், சரியாக கடை அமைந்து விட்டால் மாதம் ரூ 50,000 வரை இந்த கடையின் மூலம் வருமானம் பார்க்கலாம்.

" இது போக கல்யாண ஆர்டர்கள், விழா ஆர்டர்கள், வைபவ ஆர்டர்களும் எடுத்து அங்கும் டெலிவரி மேற்கொண்டால் வருமானத்தை இன்னும் அதிகப்படுத்தலாம் "

Business Ideas in Tamil Nadu
Small Business Ideas