• India
```

மணத்தக்காளி கீரை வளர்ப்பு...வெறும் 50 ரூபாய் முதலீடு செய்தால்...மாதம் ரூ 10000 வரை வருமானம் பார்க்கலாம்...!

Manathakkali Planting Ideas Tamil

By Ramesh

Published on:  2025-01-24 08:18:30  |    1571

Manathakkali Planting Ideas Tamil - மணத்தக்காளி கீரை வளர்ப்பின் மூலம் எவ்வாறு ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் பார்ப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Manathakkali Planting Ideas Tamil - முதலில் ஏன் இந்த மணத்தக்காளி கீரைக்கு மார்க்கெட்டில் அதிக தேவை இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம், பொதுவாக மணத்தக்காளி கீரை எவ்வளவு பெரிய குடல் புண்ணையும் எளிதாக ஆற்றும் என கூறுவார்கள், குடல் புண்ணுக்கு மட்டும் அல்லாது சர்க்கரை வியாதி, கல்லீரல் பாதுகாப்பு உள்ளிட்டவைகளுக்கும் சிறந்த உணவாக மணத்தக்காளி கீரை இருக்கிறது.

சரி இந்த மணத்தக்காளி கீரையை எப்படி பயிரிடுவது, உங்களிடம் தோட்டம் இருந்தால் தோட்டத்தில் பயிரிடலாம், மாடி இருந்தால் தொட்டிகளில் பயிரிடலாம், 300 மணத்தக்காளி விதைகள் வெறும் 50 ரூபாய் தான், வேளாண் விவசாய கல்லூரிகளிலும், வேளாண் விதைக் கடைகளிலும் வாங்கி கொள்ளலாம், வளர ஆரம்பித்ததும் வீட்டில் உருவாகும் வெங்காய மேல் தோல், காய்கறி கழிவுகளை உரமாக போடலாம்.



தேங்காய் நார் இருந்தால் அதை நன்கு தூள் செய்து மண்ணின் மேற்பரப்பில் போடலாம், சரியாக நன்கு வளர 40 முதல் 50 நாள் எடுத்துக் கொள்ளும், அதற்கு பின் அறுவடை செய்யலாம், பூச்சிகள் வந்தால் இஞ்சி, மிளகாய், மிளகு அரைத்து தண்ணீர் சேர்த்து அதை மருந்தாக தெளிக்கலாம், அறுவடை செய்த பின் அதை நார் வைத்து கட்டுகளாக கட்டிக் கொள்ள வேண்டும்.

ஒரு மணத்தக்காளி கீரை கட்டு ஆனது 25 முதல் 30 ரூபாய் வரை சந்தைகளில் விற்கப்படுகிறது, ஒரு நாள் ஒன்றுக்கு ஒரு 20 கட்டு கடைகளில், சூப்பர் மார்க்கெட்டுகளில், அருகில் இருக்கும் தெருக்கடைகளில் சந்தைப்படுத்தினால் கூட மாதம் சராசரியாக ரூ 10,000 முதல் 15,000 வரை வருமானம் பார்க்கலாம், வெறும் 50 ரூபாய் முதலீடு செய்து ரூ 10,000 வரை சம்பாதிக்க முடியும் என்றால் நல்ல தொழில் தானே.

Business Ideas in Tamil Nadu
Small Business Ideas