• India
```

வீட்டில் இருந்தே...பிராஜக்டுகள் செய்து கொடுத்தால்...மாதம் ரூ 10000 வரை வருமானம்...!

School Project Making

By Ramesh

Published on:  2025-01-29 10:15:12  |    723

School Project Making Business - பெண்கள் வீட்டில் இருந்தே குழந்தைகளுக்கான பிராஜக்டுகள் செய்து கொடுப்பதன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் ஈட்டலாம் அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

School Project Making Business - பொதுவாகவே பெண்களுக்கு வீட்டில் இருந்தே ஏதாவது ஒன்று செய்து கொஞ்சம் ஆவது நமது குடும்பத்திற்கு வருமானம் ஈட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும், பல்வேறு வீட்டு வேலைகளுக்கு மத்தியில் செய்ய கூடிய வேலையாகவும் அது இருக்க வேண்டும் என்று யோசிப்பார்கள், அந்த வகையில் வீட்டில் இருந்தே சிறு குழந்தைகளுக்கு பிராஜக்ட் செய்து கொடுப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

பொதுவாக தற்போது எல்லாம் LKG, UKG குழந்தைகளுக்கே பிராஜக்ட் என்பது அத்தியாவசியம் ஆகி விட்டது, ஆனால் அவர்களுக்கு செய்யவே தெரியாது என்றாலும் கூட அவர்களின் திறன்களை பரிசோதிக்க பள்ளிகள் செய்தே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றன, அந்த வகையில் ஒரு சிலர் பிராஜக்டுக்கான செயல்முறை வழிமுறையை அறிந்து கொள்ள இன்னொருவரை அணுகுகின்றனர்.



அவ்வாறான செயல்முறையை, வழிமுறையை நீங்கள் சொல்லி செய்ய வைப்பதன் மூலமோ அல்லது நீங்களே செய்து கொடுப்பதன் மூலமாகவோ ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் பார்க்கலாம், உங்களுக்கு இது போல பிராஜக்டுகள் செய்யும் ஆர்வம் இருந்தால் உங்களால் வித்தியாசம் வித்தியாசமாக பிராஜக்டுகள் செய்ய முடியும் என்றால் கண்டிப்பாக இந்த தொழிலை வீட்டில் இருந்தே செய்யலாம்.

பிராஜக்டுகளுக்கு தேவையான அட்டை, சார்ட்டுகள், ஸ்கெட்கள் என அனைத்தையும் மொத்த விலைக் கடைகளில் வாங்கி வைத்துக் கொண்டு, இங்கு ஸ்கூல் பிராஜக்டுகளுக்கான செய்முறை கற்றுக் கொடுத்து செய்து கொடுக்கப்படும் என ஒரு போர்டு வைத்தால் போதும், பள்ளிக் குழந்தைகளிடம் இருந்து பிராஜக்டுகள் அதுவாக வரும், ஒரு பிராஜக்டிற்கு ரூ 300 முதல் 3000 வரை வசூலிக்கிறார்கள்.

" அந்த வகையில் மாதத்திற்கு ஒரு 3 முதல் 7 பிராஜக்டுகள் வந்தாலும் கூட மாதம் சராசரியாக ரூ 10,000 வரை வருமானம் பார்க்கலாம் "

Business Ideas in Tamil Nadu
Small Business Ideas