• India
```

வேம்பு பொடி தயாரிப்பு...முதலீடே இல்லாமல்...மாதம் ரூ 15000 வரை வருமானம் பார்க்கலாம்...!

Neem Powder Making Business

By Ramesh

Published on:  2025-01-26 11:53:50  |    1407

Neem Powder Making Business - வேம்பு பொடி தயாரித்து ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் எப்படி பார்ப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

Neem Powder Making Business - பொதுவாக வேம்பு என்பது எளிதாக எல்லா இடத்திலும் எளிதாக இருக்க கூடிய ஒரு மரம், வேம்பு பல மருத்துவ பயன்களை உள்ளடக்கியது, வேம்பு இலையை அரைத்து குடித்து வந்தால் சர்க்கரை வியாதி குணமாகும், குடல் புழுக்கள் நீங்கும், வேம்போடு கொஞ்சள் மஞ்சள் அரைத்து பொடியாக்கி முகத்தில் தேய்த்து வந்தால் முகப்பருக்கள் நீங்கி முகமே பொலிவு பெறும்.

சரி அந்த வகையில் வேம்பிற்கு மருத்துவம் மற்றும் அழகு சாதன சந்தையில் ஒரு மிகப்பெரிய மார்க்கெட் இருக்கிறது, இந்த வேம்புவை எப்படி எப்படி சந்தைப்படுத்தலாம் என்றால், முதலில் வேம்புவிற்கு நீங்கள் எங்கும் அலையலாம் தேவை இல்லை, சாதாரணமாக எல்லா இடத்திலும் மரமாக வளர்ந்து நிற்கும், உங்கள் வீடுகளில் தோட்டங்களில் வளர்க்கிறீர்கள் என்றாலும் சரி தான்.



முதலில் வேப்பிலையை மரத்தில் இருந்து உதிர்த்து நிழலில் நன்கு 1 வாரம் காய வைத்து, பின்னர் பொடி செய்து கொள்ள வேண்டும், பொடியாக கலக்கி குடிப்பவர்களுக்கு அப்படியே அந்த பொடியை பேக்கிங் செய்து கொடுக்கலாம், முகத்தில் உடலில் பொலிவிற்காக பூசுபவர்களுக்கு அதில் கொஞ்சல் பூசி மஞ்சள் அரைத்து சேர்த்து கொள்ளலாம்.

பொதுவாக சந்தைகளில் 50 கிராம் வேம்பு பொடி 30 ரூபாய் வரை விற்கப்படுகிறது, பொலிவிற்காக பூசப்படும் மஞ்சள் தூள் கலந்த வேம்பு பொடி 50 கிராம் 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது, நாள் ஒன்றுக்கு ஒரு 10 முதல் 15 பாக்கெட்டுகள் சந்தைப்படுத்தினால் கூட தினசரி ரூ 500 க்கு குறையாமல் சம்பாதிக்கலாம், மாதத்திற்கு என்று கணக்கு வைத்துக் கொண்டால் 15,000 ரூபாய் வரை வருமானம் பார்க்கலாம்.

Business Ideas in Tamil Nadu
Small Business Ideas