• India
```

வெட்டி வேர் ஸ்க்ரப்பர்...சிறிய முதலீட்டில்...மாதம் ரூ 25000 வரை வருமானம்...!

Vettiver Bath Scrub Making Ideas

By Ramesh

Published on:  2025-01-21 09:53:38  |    605

Vettiver Bath Scrub Making Ideas - சிறிய முதலீடு செய்து வெட்டி வேர் ஸ்க்ரப்பர் தயாரிப்பில் ஈடுபட்டு இரு குறிப்பிடத்தக்க வருமானம் ஈட்டுவது எவ்வாறு என்பது குறித்து பார்க்கலாம்.

Vettiver Bath Scrub Making Ideas  - பொதுவாக வெட்டி வேர் என்பது அந்த காலக்கட்டங்களில் நீருக்குள் போட்டு வைத்து, நீரில் இருக்கும் கிருமிகளை நீக்கவும், நீரின் ஒரு வித வாசத்திற்காகவும் பயன்படுத்தி வந்தனர், இந்த வெட்டி வேர் பல மருத்துவ குணங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது, கிராமங்களில் இந்த வெட்டி வேர் எளிதாக கிடைக்கும், ஆனால் தற்போதெல்லாம் அதை யாரும் அதிகமாக பயன்படுத்துவதில்லை.

ஆனால் தற்போது இந்த வெட்டி வேரில் ஸ்க்ரப்பர்கள் வர ஆரம்பித்து இருக்கின்றன, அதாவது உடல் தேய்த்து குளிப்பதற்கு பலரும் இந்த ஸ்க்ரப்பர்களை பயன்படுத்தி வருகின்றனர், அந்த வகையில் உங்களால் அதிகம் வெட்டி வேர்களை கலெக்ட் செய்ய முடிந்தால் கண்டிப்பாக உங்களால் இந்த வெட்டி வேர் ஸ்க்ரப்பர் தயாரிப்பில் எளிதாக ஈடுபட முடியும்.



பொதுவாக இந்த ஸ்க்ரப்பர் தயாரிப்பிற்கு பெரிதாக ஒன்றும் தேவையில்லை, மெல்லிய வேர்களை நன்கு காய வைத்து அதை கொஞ்சல் உலர்த்தி கொள்ள வேண்டும், மெல்லிய வலை சந்தைகளில் கிடைக்கும் அதை வெட்டி ஒரே அளவாக கைகளால் பேக்கிங் செய்யலாம், வெட்டி வேரை இருக்கு வலையை சுற்றி ஒரு முடிச்சு போட்டால் போதும், ஸ்க்ரப்பர் ரெடி ஆகி விடும்,

சந்தைகளில் இதற்கான ஸ்க்ரப்பர் ரவுண்டிங் & பேக்கிங் மெசின்களும் கிடைக்கின்றன, விலை ரூ 10,000 முதல் 3 இலட்சம் வரை விலையில் மெசின்கள் இருக்கின்றன, உங்களால் முதலீடு செய்ய முடிந்தால் முதலீடு செய்யலாம், மெசின்கள் மூலம் ஸ்க்ரப்பர் தயாரித்திடும் போது கொஞ்சம் தயாரிப்புகள் அதிகம் ஆகும், சந்தை பெருகும் போது தயாரிப்புகளை அதிகப்படுத்த அது உதவும்.

" சாதாரணமாக கைகளில் தயாரித்து சந்தைப்படுத்தினால் மாதம் ரூ 20,000 முதல் 25,000 வரை வருமானம் பார்க்கலாம், மெசின்கள் மூலம் பேக்கிங் செய்து சந்தைப்படுத்தினால் இன்னும் வருமானத்தையும், விற்பனை சந்தையையும் அதிகரிக்கலாம் "

Business Ideas in Tamil Nadu
Small Business Ideas