• India
```

கருப்பட்டி விற்பனை...மொத்த கொள்முதல் செய்து விற்பனை செய்தால்...மாதம் ரூ 35000 வரை வருமானம்...!

Karuppatti Selling Business Ideas

By Ramesh

Published on:  2025-01-18 10:13:24  |    1974

Karuppatti Selling Business Ideas - கருப்பட்டியை மொத்தமாக கொள்முதல் செய்து சந்தைப்படுத்துவது எவ்வாறு என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Karuppatti Selling Business Ideas - பழங்காலங்களில் இனிப்பு என்பதற்கான மூலப்பொருளாக கருப்பட்டி, அச்சு வெல்லாம் போன்றவைகள் மட்டுமே இருந்து வந்தன, ஆனால் தற்போது சீனி, கெமிக்கல் சீனிகள் உள்ளிட்டவைகள் எல்லாம் மலிவு விலையில் மார்க்கெட்டை ஆக்கிரமித்து இருக்கின்றன, அவைகள் மலிவு விலை என்றதொரு பிளஸ் இருந்தாலும் கூட உடலுக்கு அதனால் கேடுகள் தான்,

 என்று வெள்ளை சீனீ மார்க்கெட்டை ஆதிக்கம் செலுத்த துவங்கியதோ அன்றில் இருந்தே டையாபட்டீஸ்சும் தேசத்தை ஆட்கொள்ள துவங்கி விட்டது, முன்பெல்லாம் 100 யில் ஒருவருக்கு தான் சுகர் என்றதொரு பிரச்சினை இருந்தது, தற்போதெல்லாம் 10 யில் ஒருவருக்கு அந்த பிரச்சினை இருக்கிறது, எல்லாவற்றிற்கும் காரணம் இந்த வெள்ளைச்சீனி என்று சொல்லி விட முடியாது என்றாலும் அதுவும் ஒரு காரணம் தான்.



ஆனால் கருப்பட்டி அப்படி இல்லை உடலுக்கு வலிமையை தருவதோடு மட்டும் அல்லாது பல மினரல்களையும் நம் உடலோடு சேர்க்கிறது, அந்த வகையில் மக்கள் தற்போது பழங்காலத்தை மீண்டும் வாழ நினைப்பதால் கருப்பட்டி, அச்சு வெல்லம் உள்ளிட்டவைகளுக்காக தேவை அதிகரித்து இருக்கிறது, உற்பத்தி கம்மியாக இருப்பதால் கருப்பட்டி விலை எல்லாம் ரூ 500 யை தொட்டு இருக்கிறது,

 அந்த வகையில் கருப்பட்டியை மொத்த கொள்முதல் செய்ய வேண்டுமானால் உடன்குடி, வேம்பார் பகுதிகளில் அதிகமாக கருப்பட்டி தயாரிக்கப்படுகிறது, அங்கு நேரடியாக சென்று மொத்த விலைக்கு கொள்முதல் செய்து, காமர்ஸ் மூலமும், கருப்பட்டி காபி கடைகளுக்கும் நேரடியாக பேக்கிங் செய்து கொடுத்து வந்தால் நல்ல வருமானம் பார்க்க முடியும்.

 " குறைந்தபட்சம் ஒரு கிலோ கருப்பட்டியில் 100 முதல் 150 ரூபாய் வரை மார்ஜின் வைத்து அசல் விலையை பேசிக் கொள்வது நல்லது, கருப்பட்டிக்கு தேவை அதிகம் இருப்பதால் எவ்வளவு வேண்டுமானாலும் கொள்முதல் செய்து சந்தைப்படுத்த முடியும், வருமானமும் அதற்கேற்ப கிடைக்கும் "

Business Ideas in Tamil Nadu
Small Business Ideas