• India
```

நல்ல லாபம் கொடுக்கும் வாழை பொடி பிஸ்னஸ்!! ஆயிரங்களில் வருமானம்..

Banana Powder Manufacturing Business

By Dhiviyaraj

Published on:  2025-01-22 16:28:14  |    1356

இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் சுய தொழில் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.


இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் சுய தொழில் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். சிறு தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து மத்திய அரசு  முத்ரா திட்டங்கள் போன்ற பல கடன் திட்டங்களை வழங்கி வருகிறது. 

இந்நிலையில் தற்போது வாழைப்பொடி தயாரிக்கும் தொழில் குறித்து இன்றைய தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.. 

வாழையில் ஏராளமான  ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறது. அதாவது, வாழைக்காய் பல வித நோய்களுக்கு தீர்வாக அமைகிறது என்று ஆய்வில் கூறுகின்றனர். இதனால் இதனை பயன்படுத்துபவர்கள் பல பேர் இருக்கின்றனர். இந்த தொழில் செய்வதன் மூலம் அதிகம் லாபம் எடுக்கலாம் .

வாழைப் பொடி செய்வது எப்படி:

முதலில் சோடியம் ஹைபோகுளோரைட் மூலமாக வாழை காய்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். அதன் பின் தோலுரித்து, சிட்ரிக் அமிலக் கரைசலில் 5 நிமிடம் முக்கி எடுக்க வேண்டும. அதனை அடுத்து வாழைகளை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி 60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைக்க வேண்டும் இதை செய்த உடன் இயந்திரத்தில் போட்டு நைசாக அரைக்க வேண்டும்.

தயாரிக்கப்பட்ட பொடியை கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்து விற்பனை செய்யாலாம். இந்த வாழை பொடி சந்தையில் ஒரு கிலோ ரூ.800 முதல் ரூ.1000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இந்த வாழை பொடி தொழிலை தொடங்க உங்களுக்கு ரூ 10,000 முதல் 15,000 வரை தேவைப்படும்.

மேலும் இந்த தொழில் தொடங்க உங்களுக்கு வாழைப்பழத்தை உலர்த்தி இயந்திரம் மற்றும் இரண்டாவது கலவை இயந்திரம் தேவைப்படும். இதனை நீங்கள் www.indiamart.com என்ற இணையத்தில் வாங்கலாம்.

Business Ideas in Tamil Nadu
Small Business Ideas