• India
```

இலவச தையல் மெஷின் உங்களுக்கும் வேண்டுமா? இதன் மூலம் பெறலாம்!!

Free Silai Machine Yojana Scheme

By Dhiviyaraj

Published on:  2025-01-21 22:37:21  |    1157

இந்தியாவில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்தியாவில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வரிசையில், 'பிஎம் விஸ்வகர்மா தையல் இயந்திரத் திட்டம்' 2023 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொடங்கப்பட்டது. பெண்களின் பொருளாதார முன்னேற்றம் இதன் முக்கிய நோக்கமாகும்.

தையல் தொழிலில் உள்ளவர்களுக்கு ஆதரவாக தரமான தையல் இயந்திரம் வாங்க அரசு ₹15,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. 18 வகையான பாரம்பரிய தொழிலாளர்கள் பயனடையலாம். இதில் கைவினைஞர்கள், தையல்காரர்கள் மற்றும் பிற சிற்றொழிலாளர்கள் பயன்பெறலாம். மேலும், தையல் இயந்திரம் செயல்படுத்த அரசு இலவச பயிற்சி வழங்கும். அதுமட்டுமின்றி பயிற்சிக்கால உதவித்தொகை ₹500/நாள் – பயிற்சியில் ஈடுபடும் விண்ணப்பதாரர்கள் தினமும் ₹500 உதவித் தொகை பெறலாம்.

இந்தத் திட்டம், தொழில் வாய்ப்புகளை அதிகரிக்கவும், பெண்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும் உதவுகிறது. தகுதிமான விண்ணப்பதாரர்கள் அருகிலுள்ள அரசு அலுவலகம் அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Business Ideas in Tamil Nadu
Small Business Ideas