இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வடைந்து வந்த நிலையில், கடந்த ஜனவரி 22ஆம் தேதி வரலாறு காணாத உயர்வை எட்டியது. முதல் முறையாக ஒரு சவரன் ரூ.60,000-ஐ கடந்தது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வடைந்து வந்த நிலையில், கடந்த ஜனவரி 22ஆம் தேதி வரலாறு காணாத உயர்வை எட்டியது. முதல் முறையாக ஒரு சவரன் ரூ.60,000-ஐ கடந்தது.
நேற்று (ஜனவரி 31) மாதத்தின் கடைசி நாளில், தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,730-க்கும், ஒரு சவரன் ரூ.960 உயர்ந்து ரூ.61,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று (பிப்ரவரி 1) மாதத்தின் முதல் நாளாக, தங்கத்தின் விலை மேலும் உயர்ந்து, கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.7,745-ஆகவும், ஒரு சவரன் ரூ.120 உயர்ந்து ரூ.61,960-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் உயர்ந்துள்ளது. இது கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.6,395-க்கும், ஒரு சவரன் ரூ.80 உயர்ந்து ரூ.51,160-க்கும் விற்கப்படுகிறது.